ஏகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏகன்
இயக்குனர் ராஜூ சுந்தரம்
கதை சரண்
யூகி சேது
நடிப்பு அஜித் குமார்
நயன்தாரா
ஜெயராம்
சுமன்
நவ்தீப்
பியா
நாசர்
இசையமைப்பு யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு அர்ஜுன் ஜனா
படத்தொகுப்பு அந்தோனி
விநியோகம் ஜங்கரன் இண்டர்நேஷனல்
வெளியீடு அக்டோபர் 25, 2008
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஏகன் ராஜூ சுந்தரத்தின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும் . இந்த படத்தை ஜங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அஜித் குமார், நயன்தாரா, நவ்தீப், பியா, நாசர், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

[தொகு] கதை

பல படங்களில் அஜீத்தை சீரியஸாகவே பார்த்த கண்களுக்கு இதில் சற்று ஆறுதல். இடைவேளை வரை பல காட்சிகளில் கலகல அஜீத்தைப் பார்க்க முடிகிறது.

அஜீத் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி. ஒன்மேன் ஆர்மி என்று தந்தை நாசரே வர்ணிக்கும் அளவுக்கு தனியாளாக அடித்துத் துவம்சம் செய்யும் போலீஸ் இவர். வில்லன் சுமனுடைய பழைய கூட்டாளி தேவன் போலீஸ் அப்ரூவராக மாறிவிட, அவரைக் கொன்று விடத் துடிக்கிறார் சுமன். இதனால் மறைந்து வாழ்கிறார் தேவன். அவருக்கு ஒரே ஒரு மகள் (பியா). ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கிறார்.

பியாவின் உயிருக்கு சுமனால் ஆபத்து வரும் எனக் கருதும் போலீஸ், அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை அஜீத்திடம் விடுகிறது. போலீஸ் என்று தெரியாமல் ஒரு மாணவரைப் போல மாறுவேடத்தில் போய் இதைச் செய்ய வேண்டும், அதே நேரம் பியாவின் தந்தை தேவனணையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த பணியில் அஜீத் எப்படி தன் திறமையைக் காட்டி ஏகனாக உலா வருகிறார் என்பது மீதிக்கதை.

[தொகு] நடிகர்கள்

நடிகர்கள் பாத்திரம்
அஜித் குமார் சிவா
நயன்தாரா மல்லிகா
சுமன் ஜோன் சின்னப்பா
நவ்தீப் நரேன்
பியா பூஜா
நாசர் கார்த்திகேயன்


[தொகு] பாடல்

இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

பாடல் பாடியவர்கள்:
ஹேய் சாலா ப்லேஸ், நரேஸ் ஜயர், அஸ்லம்
ஹேய் பேபி சங்கர் மகாதேவன்
யாகு யாகு சுவி, ஊஜேனி, சத்யன், ரன்ஜித், நவீன்
கிச்சு கிச்சு வசுந்திரா தாஸ், யுவன் ஷங்கர் ராஜா
ஓடும் வரையில் கே கே, சென்தி
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏகன்&oldid=1028746" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்