எல்ஜின் ஹோட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எல்ஜின் ஹோட்டல்,[1] முன்பு புதிய எல்ஜின் [2] என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த ஹோட்டல் 1887 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்டது. கட்டப்பட்ட ஆரம்பத்தில், கூச் பெஹர் பகுதியின் மகாராஜாவின் கோடைக்கால வசிப்பிடப் பகுதியாக இந்த ஹோட்டல் இருந்து வந்துள்ளது. இமயமலைப் பகுதியின் அருகில், டார்ஜிலிங்கில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஒரு பாரம்பரியமிக்க ஹோட்டலாக கருதப்படுகிறது.[3]

இருப்பிடம்[தொகு]

எல்ஜின் ஹோட்டல் டார்ஜிலிங்க் நகரத்தில் எச். டி சாலையில் அமைந்துள்ளது. வங்காளத்தின் இயற்கை மற்றும் வரலாற்று அருங்காட்சியகம் (50 மீட்டர்), பத்மஜா நாயுடு இமாலயன் விலங்கியல் பூங்கா (4.5 கிலோ மீட்டர்), சித்தரஞ்சன் தாஸ் நினைவக டென்சிங்க் பாறை (3 கிலோ மீட்டர்), புத்துயிர் கலை அருங்காட்சியகம் (1.5 கிலோ மீட்டர்) மற்றும் புலி மலை (12.3 கிலோ மீட்டர்) போன்ற பார்த்து ரசிப்பதற்குரிய அநேக இடங்கள் எல்ஜின் ஹோட்டலில் இருந்து மிக அருகில் அமைந்துள்ளன.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

எல்ஜின் ஹோட்டலில் இருந்து அருகில் அமைந்துள்ள போக்குவரத்து வசதிகள் பின்வருமாறு:

  • டார்ஜிலிங்க் விமான நிலையம் – 8.8 கிலோ மீட்டர் (தோராயமாக)
  • டார்ஜிலிங்க் ரயில் நிலையம் – 1.6 கிலோ மீட்டர் (தோராயமாக)
  • ஷமோலி பேருந்து நிலையம் – 64.5 கிலோ மீட்டர் (தோராயமாக)

வரலாறு[தொகு]

1887 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட ஹோட்டல் என்பதால் அதனை புதுப்பித்து அதன் பழைய பெருமைகள் மங்காவண்ணம் உருவாக்கியுள்ளனர். பர்மா தேக்கினால் செய்யப்பட்ட மரப்பொருட்களும், கருவாலி மரத்தின் பொருட்களால் செய்யப்பட்ட தரைக்கான பலகைகளும் ஹோட்டலுக்கு மென்மேலும் அழகு சேர்க்கின்றன. ராயல் மேனர் ஹவுஸ் கட்டிடக் கலையின் அடிப்படையில் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. பின்னர் கௌரே டௌக்ளஸ் அவர்களின் செதுக்கல்களால் ஹோட்டலின் பாரம்பரியம் மற்றும் பெருமைகள் மீளக்கொணரப்பட்டது.

இந்த ஹோட்டலில் தங்கிய பிரபலமானவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பின்வருமாறு: அமெரிக்க தூதர், பால்டன் தோன்டப் நாம்க்யால், சிக்கிம் முதல் டொமினிக் லிபியர்ரே வரையிலான இளவரசர் மற்றும் மார்க் டல்லி. இந்த ஹோட்டலின் வரலாற்றில், அதன் முதல் உரிமையாளரான கூச் பெஹரின் மகாராஜா மற்றும் 1950 ஆம் ஆண்டில் ஹோட்டலை வாங்கிய நான்சி ஓக்லே ஆகியோர் மிக முக்கியமானவர்கள் ஆவர்.

ஹோட்டலின் அம்சங்கள்[தொகு]

டார்ஜிலிங்க் பகுதிகள் அமைந்துள்ள பிரபலமான ஷாப்பிங்க் மால் மற்றும் ராஜ் பவன் (ஆளுநரின் இல்லம்) ஆகியவற்றிற்கு மிக அருகில் எல்ஜின் ஹோட்டல் அமைந்துள்ளது. நன்கு அமைக்கப்பட்ட நூலகம், விளையாட்டு அறை மற்றும் குழந்தைகள் செயல்பாட்டு மையம் ஆகியவை இங்குள்ள கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

பிரகாசமான ஒளிக்கதிர்களுடன் கூடிய சாப்பாட்டு விருப்பங்கள், மாநாட்டு அறை, வணிக மையம் மற்றும் ஸ்பா போன்ற ஏராளமான வசதிகளை எல்ஜின் ஹோட்டல் கொண்டுள்ளது. பூங்காவில் அமைந்த கசேபோ, வித்தியாசமான அமைப்புகளைக் கொண்ட பல்வேறு உணவுகள் மற்றும் குளிர்பானங்களைக் கொண்ட உணவகம் இங்குள்ளது. மிகப்பெரிய உணவருந்தும் அறையில் ஐரோப்பிய மற்றும் ஆசிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. நாட்பொழுதில் எப்போது வேண்டுமானாலும் அழைக்கும் வசதி கொண்ட அறை உணவுச் சேவையின் மூலம், வரும் விருந்தினர்களை எப்போது வேண்டுமானாலும் உபசரிக்க இயலும். சிகிச்சையுடன் கூடிய ஸ்பா உடலுக்குப் புத்துணர்ச்சியினை அளிக்கும். மேல்நிலை புரொஜெக்டர், எல்சிடி புரொஜெக்டர், ஸ்லைடு புரொஜெக்டர், பானா பலகை, மேசை ஒலிப்பெருக்கி, இசை அமைப்பு, மடிக்கணினி மற்றும் கம்பியில்லா ஒலிபெருக்கி போன்றவை மாநாட்டு அறையில் கூடுதல் வசதிகளாக வழங்கப்படுகின்றன. குழந்தைகள் வேடிக்கைகளில் ஈடுபடுவதற்கான விளையாட்டு மையமும் இங்குள்ளது.

எல்ஜின் ஹோட்டல் வசதிகள்[தொகு]

ஹோட்டல் வசதிகள்[தொகு]

குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, கதவு திறந்துவிடுபவர், துப்புரவாளர்கள், விருந்தளிக்கும் வசதி மற்றும் அழைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.[4]

விருதுகள்[தொகு]

“சிறப்புத்தன்மைக்கான சான்றிதழ் விருது 2012”[5] டிரிப்அட்வைசர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. "Places to stay in Darjeeling". incredibleindia.org. Archived from the original on 27 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Heritage Hotels in West Bengal". heritagehotels.com. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  3. "Elgin Hotels on expansion mode". thehindubusinessline.com. 17 February 2015. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  4. "Elgin Darjeeling Facilities". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  5. "TripAdvisor Certificate of Excellence 2012". tripadvisor.in. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ஜின்_ஹோட்டல்&oldid=3928233" இலிருந்து மீள்விக்கப்பட்டது