எர்போர்டு நகர உரோகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எர்போர்டு நகர உரோகர் (Roger of Hereford) (அல்லது உரோகரசு எர்போர் டென்சிசு,அல்லது உரோகர் இன்பான்சு, அல்லது உரோக புவேர்) எர்போர்டில்1178 முதல்1198 வரை முனைவாகச் செயல்பட்ட ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிய வல்லுனரும் இரசவாதியும் கணிதவியலாளரும் ஆவார்.

இவருடைய நாட்டினமோ பிறப்பிடமோ கல்விப் பெறுமதியோ தெரியவில்லை. . இவரதுமுதல் அல்லது தொடக்கநிலைப் பதிவு 1176 ஆம் ஆண்டு முதலில் எர்போர்டிலும் பின்னர் இலண்டனிலும் பேராயராக விளங்கிய கில்பெர்ட் போலியோத் ஆணைய ஆவணத்தில் இருந்து தெரிகிறது.பிந்த ஆணையம் கிறித்தவப்பண்டிகை அல்லது நல்ல /புனித நேரக் கணக்கீட்டுக்காக ஏற்படுத்தபட்டதாகும். இதற்காக உருவாக்கப்பட்ட நூற்குறிப்பில் எபிரேய, அரேபியப் புலமையைச் சுட்டிக் காட்டி கெர்லாந்து சம காலத்தில் பயன்படுத்திய நெரச் செந்தரக் குறைபாடுகளை உரோகர் வெளிப்படுத்தியுள்ளார்.[1]

எர்போர்டுக்கும் இவருக்கும் உள்ள உறவு, எர்போர்டை நெட்டாங்காக வைத்துக் கொண்டு 1178 இல் தன் பட்டியலுக்கான கணக்கீடுகள் செய்வதில் இருந்து புலனாகிறது. எர்போர்டின் (1186 - 1198) பட்டயத்தில் இருந்து இவரும் உரோகர் இன்பான்சும் ஒருவராகவே கருத வாய்ப்புள்ளது.[1]

உரோகரின் வானியல் நூலான Liber de Quatuor Partibus Judiciorum Astronomie இறைமாந்து தெ மார்சேய்ல்சுவிடம் இருந்தும் செவில்லி நகர யுவானும் கரிந்தியா நகர எர்மனும் மொழிபெயர்த்த அராபிய பாட நூல்களில் இருந்தும் தனது புலமையைப் பெற்றுள்ளது.

உரோகரின் வானியல் நூலான Liber de Quatuor Partibus Judiciorum Astronomie இறைமாந்து தெ மார்சேய்ல்சுவிடம் இருந்தும் செவில்லி நகர யுவானும் கரிந்தியா நகர எர்மனும் மொழிபெயர்த்த அராபிய பாட நூல்களில் இருந்தும் தனது புலமையைப் பெற்றுள்ளது.

உரோகர் நடுவுநிலை கணியவியல் எனும் கணிய நூலையும் எழுதியுள்ளார். இதில் பலவகை கணிய நுட்பங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் வினவல் தேர், நிகழ்வுதேர் கணியக் கருத்துகளும் வினவுபவரின் உள்நோக்கம் கணிக்கும் முறைகளும் அடங்கும். இதன் எழுத்துப்படியை 1991 இல் நிகோலசு வைட்டு பகுத்தாய்வு செய்து, இந்நூலில் உள்ள கணியக்குறிப்பு(சாதகம்) எலியனார் அக்குவிதைனின் சாதகமாகும் எனக் குறிப்பிடுகிறார்.[2]

நடுவுநிலை கணியவியல்y நூலின் 22 எழுத்துப்படிகளும் தன் முனைவர் பட்டா ஆய்வுக்கு இலைசெசுட்டர் பல்கலைக்கழகத்தில் கிறிசு மிட்செல் விரிவாக ஆய்வு மேர்கொண்டார்.[3]

இதை மொழிபெயர்த்தA சாரசுகில் நகர ஆல்பிரெடு அதை உரோகருக்குக் கனிக்கை ஆக்கியுள்ளார். உரோகர் தன் புதியமுறை கணியக் குறிப்புகளுக்காகப் பெயர்பெற்றவர் ஆவார்.[1]

பாத் நகர அதேலார்தின் புலமையையும் பண்டைய வல்லுனரின் வழிமுறைகளையும் பரப்பியதில் தானதூரோகரின் தனிச்சிறப்பு அடங்கியுள்ளது. இவரில் உரோகரின் கடைசி காலத்தில் எர்போர்டில் தன் வீட்டில் இருக்க இடந்தந்த இராபெர்ட்டு கிராசெட்டெசுட்டே அடங்குவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்போர்டு_நகர_உரோகர்&oldid=3882450" இலிருந்து மீள்விக்கப்பட்டது