எர்பியம் அசிட்டைலசிட்டோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்பியம் அசிட்டைலசிட்டோனேட்டு
இனங்காட்டிகள்
14553-08-3 நீரிலி Y
16788-89-9 முந்நீரேற்று Y
InChI
  • InChI=1S/3C5H7O2.Er/c3*1-4(6)3-5(2)7;/h3*3H,1-2H3;/q3*-1;+3
    Key: FGQSJRDKBCVFHH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • CC(=O)[CH-]C(=O)C.CC(=O)[CH-]C(=O)C.CC(=O)[CH-]C(=O)C.[Er+3]
பண்புகள்
C15H21ErO6
வாய்ப்பாட்டு எடை 464.59 g·mol−1
தோற்றம் இளஞ்சிவப்பு படிகங்கள்[1]
உருகுநிலை 103 °C (376 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எர்பியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Erbium acetylacetonate) என்பது Er(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டை சுருக்கமாக Er(acac)3 என்றும் எழுதலாம். உலோக எர்பியம்[2] அல்லது எர்பியம் மூவைதரைடுடன்[1] அசிட்டைலசிட்டோன் சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து எர்பியம் அசிட்டைலசிட்டோனேட்டை தயாரிக்கலாம். எர்பியம் குளோரைடு அம்மோனியம் அசிட்டைலசிட்டோனேட்டுடன் சேர்க்கப்பட்டு வினை நிகழ்ந்தும் எர்பியம் அசிட்டைலசிட்டோனேட்டைப் பெறலாம். தொலுயீனில் இதை மறுபடிகமாக்கலாம்.[3] இதன் நீரற்ற வடிவம் வறண்ட வளிமண்டலத்தில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. ஈரப்பதமான காற்றில் இது நீரேற்றை உருவாக்குகிறது.[4] ஆனால் ஈரப்பதமான வளிமண்டலத்தில் நீரேற்றை சூடாக்குவதன் மூலம் நீரற்ற வடிவத்தை பெற முடியாது. 190 ° செல்சியசு வெப்பநிலையில் எர்பியம் அசிட்டைலசிட்டோனேட்டு சிதையத் தொடங்குகிறது.[5] தொடர்ந்து 505 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்கினால் எர்பியம் ஆக்சைடை பெறலாம்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Janice M. Koehler, William G. Bos (December 1967). "A novel synthesis of some anhydrous rare earth acetylacetonates" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 3 (12): 545–548. doi:10.1016/0020-1650(67)80023-0. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0020165067800230. பார்த்த நாள்: 2021-09-20. 
  2. J.R. Blackborow, C.R. Eady, E.A.Koerner Von Gustorf, A. Scrivanti, O. Wolfbeis (March 1976). "Chemical syntheses with metal atoms" (in en). Journal of Organometallic Chemistry 108 (3): C32–C34. doi:10.1016/S0022-328X(00)92025-4. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022328X00920254. பார்த்த நாள்: 2021-09-20. 
  3. 3.0 3.1 J. Blanusa, B. Antic, A. Kremenovic, A.S. Nikolic, L. Mazzerolles, S. Mentus, V. Spasojevic (November 2007). "Particle size effect on Néel temperature in Er2O3 nanopowder synthesized by thermolysis of 2, 4-pentadione complex" (in en). Solid State Communications 144 (7–8): 310–314. doi:10.1016/j.ssc.2007.09.003. Bibcode: 2007SSCom.144..310B. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0038109807006448. பார்த்த நாள்: 2021-09-20. 
  4. Trembovetskii, G. V.; Martynenko, L. I.; Murav'eva, I. A.; Spitsyn (1984). "V. Synthesis and study of volatile rare earth acetylacetonates" (in ru). Doklady Akademii Nauk SSSR 277 (6): 1411–1414. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-3264. 
  5. Martynenko, L. I.; Murav'eva, I. A.; Khalmurzaev, N. K.; Spitsyn, V. I. Preparation of volatile rare earth element tris(acetylacetonates) by the heating of their hydrates. Izvestiya Akademii Nauk SSSR, Seriya Khimicheskaya, 1984. 6: 1207-1211. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3353. language=ru