எர்ன்சுட் ஆர்டெர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்ன்சுட் ஆர்டெர்ட்
பிறப்பு(1859-10-29)29 அக்டோபர் 1859
ஆம்பர்கு, ஜெர்மனி
இறப்பு11 நவம்பர் 1933(1933-11-11) (அகவை 74)
பெர்லின், ஜெர்மனி
துறைபறவையியலாளர்
பணியிடங்கள்திரிங், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
Patronsவால்டர் ரோத்ஸ்சைல்ட், 2வது பரோன் ரோத்ஸ்சைல்ட்
அறியப்படுவதுஇங்கிலாந்து பறவைகள்-கையேடு
பின்பற்றுவோர்எர்வின் ஸ்ட்ரெஸ்மேன்
Author abbrev. (zoology)ஆர்டெர்ட்
துணைவர்கிளாடியா பெர்னாடின் எலிசபெத் ஆர்டெர்ட்
பிள்ளைகள்1 மகன்

எர்ன்சுட் ஜோகான் ஓட்டோ ஆர்டெர்ட் (Ernst Hartert)(29 அக்டோபர் 1859 - 11 நவம்பர் 1933) பரவலாக அறியப்பட்ட ஜெருமனிய பறவையியலாளர் ஆவார்.

வாழ்க்கை மற்றும் பணி[தொகு]

ஆர்டெர்ட் 1859ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி ஜெர்மனியின் ஆம்பர்க்கில் பிறந்தார். சூலை 1891ல், இவர் ஜெர்மனியின் பிராங்புர்ட் ஆம் மெயினில் உள்ள கிளாடியா பெர்னாடின் எலிசபெத் ஹார்டெர்ட் என்ற வரை கலைஞரை மணந்தார். இந்த இணையருக்கு ஜோச்சிம் கார்ல் (சார்லஸ்) ஆர்டெர்ட் (1893-1916) என்ற மகன் பிறந்தார். இவர் சோமில் இராணுவ வீரராக மரணமடைந்தார்.[1]

ஆர்டெர்ட், தனது மனைவியுடன் சேர்ந்து, நீல வால் பப்போன் ஓசனிச்சிட்டுகள் துணையினங்களை முதலில் விவரித்தவர். இவர், ஈக்வடார் மற்றும் மெக்சிகோவில் உள்ள ஓசனிச்சிட்டுகள் தொகுப்பு எனும் கட்டுரையினை கூட்டு வெளியீடாக வெளியிட்டார்.

ஆர்டெர்ட் 1892 முதல் 1929 வரை இங்கிலாந்தில் உள்ள டிரிங்கில் உள்ள ரோத்ஷில்டின் தனியார் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பறவையியல் கண்காணிப்பாளராக வால்டர் ரோத்ஸ்சைல்ட், 2வது பரோன் ரோத்ஸ்சைல்டால் பணியமர்த்தப்பட்டார்.[1]

ஆர்டெர்ட் ரோத்ஸ்சைல்டுடன் காலாண்டு அருங்காட்சியக இதழான “விலங்கியல் புதுமைகள்” (Novitates Zoologicae )(1894-39) மற்றும் பிரான்சிசு சார்லசு இராபர்ட் ஜோர்டெய்ன், நார்மன் பிரடெரிக் டைசுஆர்சுட் மற்றும் ஹாரி போர்ப்சு விதர்பி ஆகியோருடன் இங்கிலாந்துப் பறவைகள் கையேட்டினை (1912) வெளியிட்டார். இவர் டை வோகல் டெர் பலார்க்டிஷென் விலங்கினங்கள் (Die Vögel der paläarktischen Fauna) (1910-22) எனும் நூலை எழுதினார். இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்குத் தொழில்முறை பயணம் மேற்கொண்டார்.[1]

பெர்லினில் உள்ள வால்ட்ஃப்ரைட்ஹோஃப் டாஹ்லெமில் உள்ள எர்ன்ஸ்ட் ஆர்டெர்ட்டின் கல்லறை

1930ல், ஓய்வு பெற்றவுடன் பெர்லினுக்குச் சென்றார். அங்கு அவர் 1933 இல் இறந்தார்.[2]

ஆர்டெர்ட் எர்வின் ஸ்ட்ரெஸ்மனுக்கு வழிகாட்டியாக இருந்தார். 1972-ல் ஆர்டெர்ட்டின் கல்லறையில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. [3]

பணி[தொகு]

எர்ன்ஸ்ட் ஆர்டெர்ட்டின் வெளியீடுகள்: [4]

  • (1891) பிராங்பேர்ட் ஆம் மெயினில் உள்ள சென்கென்பெர்க் இயற்கை ஆராய்ச்சி சங்கத்தின் அருங்காட்சியகத்தில் பறவை சேகரிப்பு பட்டியல் (Katalog der Vogelsammlung im Museum der Senckenbergischen Naturforschenden Gesellschaft in Frankfurt am Main).
  • (1897) போடர்கிடே, கேப்ரிமுல்கிடே மற்றும் மேக்ரோப்டெரிகிடே (Podargidae, Caprimulgidae und Macropterygidae) .
  • (1897) விலங்கு இராச்சியம். (Das Tierreich) .
  • (1900) ட்ரோசிலிடே (Trochilidae) .
  • (1902) ஒரு இயற்கை ஆர்வலரின் அனுபவங்களிலிருந்து: ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் பயணம் மற்றும் ஆராய்ச்சி, பெரும்பாலும் பறவையியல் ஆய்வுகள் (Aus den Wanderjahren eines Naturforschers: Reisen und Forschungen in Afrika, Asian and Amerika, nebst daran anknüpfenden, meist ornithologischen Studien .
  • (1903) பிப்ரிட் பேரினத்தில் மாசியசு சிற்றினம் (Masius BpUeber die Pipriden-Gattung Masius Bp.)
  • (1910–1922). பாலேர்டிக் விலங்கினங்களில் பறவைகள்: ஐரோப்பா, வட ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படும் பறவைகளின் முறையான ஆய்வு. மூன்று தொகுதிகள் (Die Vögel der paläarktischen Fauna: Systematische Übersicht der in Europa, Nord-asien und der Mittelmeerregion vorkommenden Vögel) .
  • (1920) ஐரோப்பாவின் பறவைகள். (Die Vögel Europas.).
  • Hartert, Ernst; Jourdain, F.C.R.; Ticehurst, N.F.; Witherby, H.F. (1912). A Hand-List of British Birds, with an account of the distribution of each species in the British Isles and abroad. London: Witherby & Co. OCLC 70467193.

பெயரிடல்[தொகு]

பல்லி ஒன்றின் சிற்றினப் பெயரானது, ஆர்டெர்ட் நினைவாக கெமிபிலோடாக்டைலசு ஆர்டெர்டி (Hemiphyllodactylus harterti) எனவும் 12 பறவைகளுக்கும் இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளன.[5]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • வகை:டாக்சா எர்ன்ஸ்ட் ஹார்டெர்ட் என்பவரால் பெயரிடப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Obituary: ERNST JOHANN OTTO HARTERT. 1859-1933" (PDF). British Birds. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
  2. Rothschild (1934).
  3. Nöring, Rolf (1973). "Erwin Stresemann. 22. 11. 1889 – 20. 11. 1972". Journal für Ornithologie 114: 455-500 (in German).
  4. A complete list of Hartert's publications is contained in Hartert's obituary, Rothschild 1934.
  5. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Hartert", p. 117).

ஆதாரங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • விதர்பி, HF (1933). "எர்னஸ்ட் ஜோஹன் ஓட்டோ ஹார்டர்ட்". இயற்கையில், v. 123, எண். 3344, 2 டிசம்பர் 1933, பக். 846-7.
  • ஸ்ட்ரெஸ்மேன் இ (1967). "ஹார்டெர்ட், எர்ன்ஸ்ட் ஜோஹன் ஓட்டோ", ப. 711. இல் : Neue Deutsche Biographie, தொகுதி 7. பெர்லின்: டன்கர் & ஹம்ப்லாட். 784 பக்.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-428-00188-5ஐஎஸ்பிஎன் 3-428-00188-5 (ஜெர்மன் மொழியில்).

வெளி இணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் எர்ன்சுட் ஆர்டெர்ட் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ன்சுட்_ஆர்டெர்ட்&oldid=3628185" இலிருந்து மீள்விக்கப்பட்டது