எம். முகம்மது சித்தீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். முகம்மது சித்தீக் (M. Mohammad Siddik) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தின், பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பிறப்பு[தொகு]

முகம்மது சித்தீக் 27 மே 1957ஆம் ஆண்டு தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள எடுத்துக்கட்டி ஊராட்சி சாத்தனூரில் பிறந்தார்.[2]

கல்வி[தொகு]

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்களாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆயப்பாடியில் உள்ள நேசனல் உயர் நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு வரை பயின்றார்

அரசியல்[தொகு]

இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் (லத்தீப்) அணியிலிருந்த இவர், பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1989 பூம்புகார் தி.மு.க 47.33 40657

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._முகம்மது_சித்தீக்&oldid=3906414" இலிருந்து மீள்விக்கப்பட்டது