எம். டி. ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். டி. ராஜேந்திரன் (பிறப்பு : 1952) என்பவர் ஒரு மலையாளக் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியரும், புதின எழுத்தாளரும் ஆவார். 2014 இல், கேரள சங்கீத நாடக அகாதமியின் கலாசிறீ விருது பெற்றார்.[1]

இவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சேர்ப்பில் பிரபல கவிஞர் பொன்குன்னம் தாமோதரன் மற்றும் குஞ்சிக்குட்டியம்மா ஆகியோருக்கு மகனாக 1952 இல் பிறந்தார். ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1978ல் "மோசனம்" திரைப்படத்தில் பாடல்கள் எழுதி மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.

பின்னர் ஷாலினி மேரே பட்சாரி, ஸ்வாட், கதையா சாதே போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதினார். இவர் கவிதைகள், நாடகங்கள், கதைகள் மற்றும் நாவல்கள் எழுதுகிறார். இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அனைத்திந்திய வானொலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "കേരള സംഗീതനാടക അക്കാദമിയുടെ കലാശ്രീ പുരസ്‌കാരങ്ങൾ പ്രഖ്യാപിച്ചു". www.mathrubhumi.com. Archived from the original on 2014-11-30. பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._ராஜேந்திரன்&oldid=3917005" இலிருந்து மீள்விக்கப்பட்டது