எம். குப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். குப்பன் (M. Kuppan) மலேசிய நாட்டைச் சேர்ந்த மலேசிய கால்பந்து மேலாளர் ஆவார். 2021 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இவர் காலமானார்.

78 வயதான முன்னாள் பன்னாட்டு வீரரும் பயிற்சியாளருமான குப்பன் எந்த அணியுடனும் அல்லது சங்கங்களுடனும் உத்தியோகபூர்வ உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. கால்பந்து விளையாடுவதை நிறுத்தி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனபிறகும் கூட இவருக்கு மலேசிய கால்பந்து உலகில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளுக்கு அவர் கடைசிவரை அழைப்புகளைப் பெற்று வந்தார்.

தொழில்[தொகு]

குப்பன் 1958 ஆம் ஆண்டில் பினாங்கு துறைமுக ஆணையத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். அதே ஆண்டில் பினாங்கு மாநில அணிக்கான அழைப்பைப் பெற்றார். பினாங்குடனான தனது முதல் பருவப் போட்டியில் குப்பன் மலேசியா கோப்பையை வெல்ல காரணமானார். இதே ஆண்டில், மெர்டேக்கா கோப்பையை வென்ற தேசிய அணிக்கான அழைப்பையும் பெற்றார். 1965 ஆம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகள் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பினாங்கிற்காக 10 பருவப் போட்டிகளில் விளையாடினார். காயம் இவரை 1967 ஆம் ஆண்டில் ஓய்வு பெறச் செய்தது. விளையாட்டு வாழ்க்கை முடிந்ததும், குப்பன் பயிற்சிக்கு திரும்பினார். 1972-78 ஆண்டுகள் வரை தேசிய அணிக்கு பயிற்சியாளராகத் தலைமை தாங்கினார். மலேசியா 1975 மற்றும் 1976 இல் இரண்டு முறை தாய்லாந்து கிங்சு கோப்பை கோப்பையையும், 1976 ஆம் ஆண்டில் மெர்டேகா கோப்பையையும் இவரது பதவிக்காலத்தில் வென்றது.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kuppan still inspires with his undying passion". thestar.com.my (Archived).
  2. "Remembering the dashing days of Kuppan". nst.com.my.
  3. "Malaysia's football luminary M. Kuppan". thevibes.com.
  4. "Football great M Kuppan". freemalaysiatoday.com (Archived).
  5. "Road renamed Jalan M. Kuppan to honour the late Penang football legend". buletinmutiara.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._குப்பன்&oldid=3790038" இலிருந்து மீள்விக்கப்பட்டது