எம். இராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். இராஜ்குமார், 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.[1]2006-2011 வரை பெரம்பலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக எம். இராஜ்குமார் இருந்தார்.

2012ம் ஆண்டில் எம். இராஜ்குமார் வீட்டில் வேலை செய்த சிறுமியை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் வழக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றம் 2018ம் ஆண்டில் இராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.[2] டிசம்பர் 2020ல் மேல்முறையீட்டில் எம். இராஜ்குமாரை சென்னை உயர் நீதிமன்றம் குற்ற வழக்கிலிருந்து விடுவித்தது. [3]

ஆகஸ்டு 2022ல் எம். இராஜ்குமார் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._இராஜ்குமார்&oldid=3783869" இலிருந்து மீள்விக்கப்பட்டது