என் கண் முன்னாலே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் கண் முன்னாலே கனடாவில் தயாராகி ஒக்டோபர் 10, 2009 வெளியான தமிழ்த்திரைப்படம். மதி திரைப்படத்தை இயக்கிய எம். ஸ்ரீரங்கன் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏற்றுள்ளார்.
ஏ 3எஸ் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக இந்தத் திரைப்படத்தை தயாரிப்பவர் ஈ. ரேணுகா.
கே.எஸ்.பாலச்சந்திரன், சத்தியா, ரமணன், நிதா, சித்திரா பீலிக்ஸ், சுதன், கார்த்திகா, போல், குமார் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படத்தின் இசையை எம்.வாகீசனும், படத்தொகுப்பை எம்.பிரசன்னாவும் ஏற்றுள்ளார்கள்.