உவமான சங்கிரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உவமைகளைச் சொல்லடைவாகவும், பொருளடைவாகவும் தொகுத்துக் காட்டும் நூல் உவமான சங்கிரகம்.

உவமான சங்கிரக நூல்கள் நான்கு.

உவமான சங்கிரகம் என்னும் பெயரால் மூன்று சிறிய நூல்கள் உள்ளன. அவை முறையே நூற்பாவாலும், விருத்தப்பாவாலும், வெண்பாவாலும் ஆனவை. இவற்றின் காலம் முறையே 15, 17, 18ஆம் நூற்றாண்டு.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உவம-இயல் மொழியின் அணியைக் கூறுகிறது. இதனை விரிவுபடுத்தித் தண்டியலங்காரம், மாறனலங்காரம் ஆகிய நூல்கள் பல்வேறு அணிகளைக் கூறுகின்றன. இந்த நூல்கள் பெண்ணின் உறுப்புகளுக்கு முன்னோர் சொன்ன உவமைகளைத் தொகுத்துக் கூறுகின்றன.

13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றிலக்கியம் எனப்படும் பிரபந்த நூல்கள் தோன்றின. பிரபந்தங்களில் பல பெண்ணை வருணிப்பதில் ஆர்வம் காட்டின. அவர்கள் வருணிக்கக் கையாண்ட உவமைகளைத் தொகுத்துக் கூறுபவை இந்த நூல்கள்.

கருவிநூல்[தொகு]

  • தமிழ் இலக்கிய வரலாறு, மு அருணாசலம்
  • தமிழ் இலக்கண நூல்கள், ச.வே.சுப்பிரமணியன், 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=உவமான_சங்கிரகம்&oldid=1131662" இலிருந்து மீள்விக்கப்பட்டது