உள்ளாவூர் அகத்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளாவூர் அகத்தீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளாவூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் அகஸ்தீஸ்வரபுரம் என்று முன்னர் அழைக்கப்பட்டது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் உள்ளார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். சரங்கொண்றை மரம் இக்கோயிலின் தல தரமாக உள்ளது. தீர்த்தமாக தாமரைக்குளம் உள்ளது.[1]

அமைப்பு[தொகு]

பாண்டியர்கள் பல கோயில்களைக் கட்டுவித்தும், புதுப்பித்தும் உள்ளனர். இக்கோயில் அவர்களால் கட்டப்பட்டதாகும். அவர்களது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் பல இடங்களில் மீன் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயில் முகப்பில் சித்தி விநாயகர் காணப்படுகிறார். திருச்சுற்றில் சண்டிகேசுவரர் காணப்படுகிறார். மூலவர் கருவறைக்கு முன்பு இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். வலது புறத்தில் முருகன் 12 கைகளுடன் காணப்படுகிறார். இடது புறத்தில் அம்மன் சன்னதி காணப்படுகிறது. மூலவருக்கு எதிரில் நந்தி உள்ளது. அருகே நவக்கிரக சன்னதி உள்ளது. அகத்தியருக்கு சிவன் காட்சி தந்த பெருமையுடைய தலமாகும். அவர் இறைவனை நேரில் காண்பதற்காக அமர்ந்த நிலையில் இங்கு தவம் செய்துள்ளார்.[1]

திருவிழாக்கள்[தொகு]

பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]