உறுப்பு பராமரிப்பு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறுப்பு பராமரிப்பு அமைப்பு (Organ Care System) என்பது டிரான்சுமெடிக்சு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு மருத்துவ சாதனம் ஆகும். தானம் செய்யப்பட்ட உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் நீண்ட காலத்திற்கு பராமரித்து வைக்க இவ்வமைப்பு அனுமதிக்கிறது. உறுப்புகளை உறைய வைப்பதன் மூலம் உறுப்புகளைப் பாதுகாக்கும் பாரம்பரிய முறையிலிருந்து இந்த அமைப்பு வேறுபட்டதாகும். உறுப்புக்கள் மூலம் நன்கொடையாளரின் இரத்தத்தை ஊடுருவி, மனித உடலைப் போன்ற ஒரு சூழலையும் வெப்பநிலையையும் உருவாக்கி உறுப்புகளை பராமரிப்பது இவ்வமைப்பு முறையின் சிறப்பாகும்.

உறுப்பு பராமரிப்பு அமைப்பு மூலம், இதய இரத்தத் தமனிகள் ஊடுருவப்பட்டு அதற்குச் சமமான சூடான ஆக்சிசனேற்றப்பட்ட இரத்தம் பெருந்தமனிக்குள் செலுத்தப்பட்டு உடலுக்கு வெளியேயும் இதயம் பராமரிக்கப்படுகிறது.

சுருக்கமாக பெட்டிக்குள் இதயம்" என்றும் இந்த அமைப்பு அழைக்கப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Heart in a Box". UCLA Medicine. UCLA Health. Summer 2011. பார்க்கப்பட்ட நாள் April 15, 2021.

புற இணைப்புகள்[தொகு]