உம்பெர்த்தோ எக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உம்பெர்த்தோ எக்கோ
Umberto Eco
பிறப்பு(1932-01-05)5 சனவரி 1932
அலெசாந்திரியா, பியத்மாந்து, இத்தாலி
இறப்பு19 பெப்ரவரி 2016(2016-02-19) (அகவை 84) [1]
காலம்20ம் / 21ம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்தைய மெய்யியல்
பள்ளிகுறியியல்
முக்கிய ஆர்வங்கள்
வாசகர் மறுமொழி விமர்சனம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
திறந்த படைப்பு ("opera aperta")
கையொப்பம்

உம்பெர்த்தோ எக்கோ (Umberto Eco, சனவரி 5, 1932 - பெப்ரவரி 19, 2016) ஓர் இத்தாலிய குறியியலாளர், ஐரோப்பிய இடைக்கால ஆர்வலர், மெய்யியலாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளர்.

இத்தாலியின் தூரின் பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய இடைக்கால மெய்யியல் மற்றும் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற எக்கோ, அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் (1956-64) பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இத்தாலியின் தேசிய அலைபரப்பு ஊடக நிறுவனத்தில் பண்பாட்டு ஆசிரியராகவும், இத்தாலிய இராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். பின்னர் மிலான் நகரின் போம்பியானி பதிப்பகத்தின் அபுனைவு (non-fiction) பிரிவின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் தான் குறியியல் பற்றி சிந்திக்கத் தொட்ங்கினார். இத்துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஹார்வார்ட் உட்பட பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள எக்கோ தற்போது போலோன்யா பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

1956ல் அவரது முதல் புத்தகம் இல் பிராப்ளேமா எஸ்தெடிகோ இன் சான் தொமாஸ்கோ (Il problema estetico in San Tommaso) வெளியானது. குறியியல் பற்றியும் இடைக்காலத்தைப் பற்றியும் பல முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை எக்கோ எழுதியிருந்தாலும், 1980ல் வெளியான இல் நொம் டெல்ல ரோசா (Il nome della rosa, ஆங்கிலம்: The Name of the Rose) என்ற புதினமே அவருக்கு உலகப்புகழ் பெற்றுத்தந்தது. வரலாற்றுப் புனைவு, இடைக்கால மெய்யியல், இறையியல், துப்பறிவுப் புனைவு என பல பாணிகளின் கூறுகளைக் கொண்டிருக்கும் இப்புதினம், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் வெற்றிக்குப் பின்னர் எக்கோ உலகெங்கும் அறியப்படுகிறார்.

குறிப்பிடத்தக்க புதினங்கள்[தொகு]

  • இல் நொம் டெல்ல ரோசா (Il nome della rosa; The Name of the Rose)
  • இல் பெண்டோலோ டி ஃபூகால்ட் (Il pendolo di Foucault; Foucault's Pendulum)
  • லிசொலா டெல் கியொர்னா பிரைமா (L'isola del giorno prima; The Island of the Day Before)
  • பாடோலினோ (Baudolino; Baudolino)
  • லா மிஸ்டீரியோசா ஃபியாம்மா டெல்லா ரெஜினா லொனா (La misteriosa fiamma della regina Loana; The Mysterious Flame of Queen Loana)
  • இல் சிமிடெரொ டி பிராகா (Il cimitero di Praga; The cemetery in Prague)

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "È morto lo scrittore Umberto Eco". Corriere Della Sera Online (in italian). 19 February 2016. பார்க்கப்பட்ட நாள் 19 February 2016. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்பெர்த்தோ_எக்கோ&oldid=2710827" இலிருந்து மீள்விக்கப்பட்டது