உப்பு வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1870-களில் சுங்க வேலியும் (சிவப்பில்) உயிர் வேலியும் (பச்சையில்)

உப்பு வேலி என்பது ஆங்கிலேயர்களால் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு உப்பு கொண்டு செல்வதைத் தடுக்க ஏற்படுத்தப் பட்டிருந்த சுங்க வேலியாகும். ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்திருந்ததால் அதை மக்கள் கொடாமல் இருப்பதைத் தடுத்து வரி வசூலிக்க இது ஏற்படுத்தப்பட்டது. இது அதிக அளவாக 4000 கிலோ மீட்டருக்கு மேலான நீளமும் 12 அடி உயரமும் கொண்டிருந்தது. 1803-ஆம் ஆண்டு வாக்கில் இவ்வேலி அமைத்தல் தொடங்கப்பட்டது.

ஒரு சமயத்தில் இதன் பாதுகாப்பில் 14000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்[1].

உப்பின் மீதான இந்த வரி 1930-இல் தொடங்கிய உப்பு சத்தியாகிரகத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.

மீள் கண்டுபிடிப்பு[தொகு]

இவ்வளவு பெரிய வேலியும் சுங்க வரி அமைப்பும் இருந்த போதிலும் அந்தக் காலகட்ட வரலாற்றுக் குறிப்புகளில் இதனைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால் இவற்றைப் பற்றி இந்தியாவிலோ பிரிட்டனிலோ பரவலாகத் தெரியவில்லை. இராய் மாக்சாம் என்னும் இலண்டன் பல்கலைக் கழக நூலகப் பணியாளர் வில்லியம் என்றி சிலீமான் என்பாரின் நூலில் குறிப்பிட்டிருந்த இந்த வேலியைப் பற்றி படித்து அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள முயன்றார். மேலும் இதன் இடத்தைக் கண்டுபிடிக்கவும் விரும்பினார். இலண்டனில் இதைப்பற்றி விரிவான ஆய்வுகள் செய்து பின்னர் இந்த வேலியைத் தேடி இந்தியாவிற்கு மும்முறை வந்தார். 1998-இல் உத்திரப்பிரதேசத்தில் எட்டவா மாவட்டத்தில் சிறிய கரைமேட்டைக் கண்டார். இது அந்தப் பெரும்வேலியின் மிச்சமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.[2]

அந்த வேலியைப் பற்றியும் வேலியைத் தேடிய தனது அனுபவங்களையும் இவர் ஒரு நூலாக எழுதி 2001-இல் வெளியிட்டார். உப்புவேலியைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் இதுவே என்று கூறப்படுகிறது. இந்த நூல் மராத்தி மொழியில் ஆனந்த் அபியங்கர் என்பவராலும் தமிழில் சிரில் அலெக்சு என்பவராலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.[3][4]

உசாத்துணை[தொகு]

  1. எஸ், ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக் 116, உப்புக் கடத்தல். {{cite book}}: Unknown parameter |பக்கம்= ignored (help)CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link)
  2. Moxham 2001, ப. 219.
  3. Abhyankar 2007.
  4. Kolappan, B. (17 March 2015). "The hedge that denied Indians their daily salt" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/the-hedge-that-denied-indians-their-daily-salt/article7001351.ece. பார்த்த நாள்: 11 January 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பு_வேலி&oldid=2948478" இலிருந்து மீள்விக்கப்பட்டது