உபகிரகங்கள் (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமயத்தில் உபகிரகங்கள் எனப்படுவது நவக்கிரகங்களின் புத்திரர்கள் ஆவர்.

குளிகாதி நால்வர்[தொகு]

  • குளிகன் - சனியுனுடைய புத்திரர்
  • எமகண்டன் - குருவினுடைய புத்திரர்
  • அர்த்தப்பிரகரணன் - புதனுடைய புத்திரர்
  • காலன் - சூரியனுடைய புத்திரர்

தூமாதி ஐவர்[தொகு]

  • தூமன் - செவ்வாயுடைய புத்திரர் - புகை சமுகத்தையொத்து வால் நட்சத்திரம் ஆகும்.
  • வியதீபாதன் - இராகுவுடைய புத்திரர் - கொள்ளிக்கட்டை நெருப்பைப் போல் காணப்படுவான்.
  • பரிவேடன் - சந்திரனுடைய புத்திரர் - சூரிய சந்தரர் பிம்ப அந்தரக்கதனுய் அவர்கள் உதிக்கும்போது, அவர்கள் மண்டலத்தைச் சுற்றி பலவித வர்ணங்களுடன் வட்ட வடிவாகக் காணப்படுவான்.
  • இந்திரதனுசு - சுக்கிரனுடைய புத்திரர் - பலவித வர்ணங்களுடன் அந்தியில் கிழக்கிலும் , அதிகாலையில் மேற்கிலும் வில்லைப்போல உலகப்பிரசித்தமாகக் காணப்படுவான்.
  • தூமகேது - கேதுயுடைய புத்திரர் - ஒரோர்காலத்தில் வால் நட்சத்திரமாகக் காணப்படுவான்.

மூலநூல்[தொகு]

ஜாதக அலங்காரம் (ஜோதிட நூல்)

ஆதாரங்கள்[தொகு]