ஈய(II) பெர்குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈய(II) பெர்குளோரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • பிளம்பசு பெர்குளோரேட்டு, காரீய பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
13637-76-8
ChemSpider 55560
EC number 237-125-7
InChI
  • InChI=1S/2ClHO4.Pb/c2*2-1(3,4)5;/h2*(H,2,3,4,5);/q;;+2/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61655
SMILES
  • [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Pb+2]
UN number 1470
பண்புகள்
Pb(ClO4)2
வாய்ப்பாட்டு எடை 406.10 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 2.6 கி/செ.மீ3
கொதிநிலை 250 °C (482 °F; 523 K) (சிதையும்)
256.2 கி/100 மி.லி (25 °செல்சியசு)
ஆவியமுக்கம் 0.36 டார் (முந்நீரேற்று)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் பாதரச(II) பெர்குளோரேட்டு; வெள்ளீய(II) பெர்குளோரேட்டு; காட்மியம் பெர்குளோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஈய(II) பெர்குளோரேட்டு (Lead(II) perchlorate) Pb(ClO4)2·xH2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். வாய்ப்பாட்டிலுள்ள x இன் மதிப்பு 0,1 அல்லது 3 என மாறுபடும். வெண்மை நிறத்தில் காணப்படும் இச் சேர்மம் அதிக அளவில் நீருறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் தண்ணீரில் நன்கு கரையக்கூடியதாகவும் உள்ளது.[1]

தயாரிப்பு[தொகு]

ஈய(II) ஆக்சைடு, ஈயக் கார்பனேட்டு, அல்லது காரீய(II) நைட்ரேட்டு ஆகியவற்றுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஈய பெர்குளோரேட்டு முந்நீரேற்று உருவாகிறது.

Pb(NO3)2 + HClO4 → Pb(ClO4)2 + HNO3

. அதிகப்படியான பெர்குளோரிக் அமிலம் முதலில் கரைசலை 125 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கி, பின்னர் 160 °செல்சியசு வெப்பநிலைக்கு ஈரமான காற்றின் கீழ் சூடாக்கி, அமிலத்தை இருநீரேற்றாக மாற்றுவதன் மூலம் அதிகப்படியான பெர்குளோரிக் அமிலத்தை அகற்றலாம். ஈய பெர்குளோரேட்டு முந்நீரேற்றை நீரற்ற சூழலில் பாசுபரசு பெண்டாக்சைடுடன் சேர்த்து 120 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி நீரற்ற Pb(ClO4)2 உப்பை தயாரிக்கலாம். முந்நீரேற்று 83 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். நீரற்ற உப்பு 250 ° செல்சியசு வெப்பநிலையில் ஈயம்(II) குளோரைடு மற்றும் ஈயம்(II) ஆக்சைடாக சிதைகிறது. முந்நீரேற்றை பகுதியளவு நீர் நீக்கம் செய்து ஒற்றைநீரேற்றை தயாரிக்க முடியும். இந்த ஒற்றை நீரேற்று 103 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீராற்பகுப்புக்கு உட்படுகிறது. [2]

மெத்தனாலில் உள்ள நீரற்ற ஈயம்(II) பெர்குளோரேட்டின் கரைசல் வெடிக்கும் தன்மை கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. H. H. Willard; J. L. Kassner (1930). "PREPARATION AND PROPERTIES OF LEAD PERCHLORATE" (in en). Journal of the American Chemical Society (ACS Publications) 52 (6): 2391–2396. doi:10.1021/ja01369a027. 
  2. A. V. Dudin (1993). "Water-vapor pressure and thermodynamics of the dehydration of manganese, nickel, cadmium, and lead perchlorate hydrates" (in en). Russian Chemical Bulletin 42: 417–421. doi:10.1007/BF00698419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈய(II)_பெர்குளோரேட்டு&oldid=3602188" இலிருந்து மீள்விக்கப்பட்டது