இலங்கை வனவிலங்கு சரணாலயங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரணாலயங்கள் இலங்கையின் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களின் ஒரு வகுப்பாகும். இவை வனசீவராசிகளின் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. சரணாலயங்கள் 1937 ஆம் ஆண்டின் விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளை (எண் 2) ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் அமைச்சக ஒழுங்கமைப்பு மூலம் திருத்தப்படலாம் அல்லது அகற்றப்படலாம். சரணாலயங்களில் உள்ள அனைத்து வனவிலங்குகளும் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் வாழ்விடம் அரசுக்கு சொந்தமான நிலத்தில் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது. இதனால் மனித நடவடிக்கைகள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தொடர அனுமதிக்கிறது. வேட்டையாடப்படுதல், கொலை செய்தல் அல்லது வேட்டையாடுவது, பறவைகள் மற்றும் ஊர்வன முட்டைகளை / கூடுகள் அழித்தல், காட்டு விலங்குகளை தொந்தரவு செய்தல், விலங்குகளின் இனப்பெருக்கத்தில் குறுக்கிடுவது, தாவரங்கள் மற்றும் விலங்குகளை சேதப்படுத்தக் கூடிய பொறி, வெடிகள், நச்சுப் பதார்த்தங்கள், தீ பற்றக் கூடிய பொருட்களை வைத்திருத்தல் அல்லது பயன்படுத்தல் என்பன சரணாலயங்களில் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.

சரணாலயங்களில் நுழைய அனுமதி தேவையில்லை.[1] தற்போது இலங்கையில் 61 சரணாலயங்கள் உள்ளன, அவை 2,780 கிமீ 2 (1,073 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன.[1]

சரணாலயங்கள்[தொகு]

தேசிய பூங்கா அமைவிடம் நிறுவப்பட்ட தினம்

[2]
பரப்பளவு[2]
km² mi²
ஆனைவிழுந்தவ வடமேல் மாகாணம் சூன் 11, 1997 13.97 5.39
அநுராதபுரம் வட மத்திய மாகாணம் மே 27, 1938 35.01 13.52
பார் ரீப் வடமேல் மாகாணம் ஏப்ரல் 3, 1992 306.70 118.42
பெல்லன்வில- அட்டிடிய மேல் மாகாணம் சூலை 25, 1990 3.72 1.44
புந்தன்கல கிழக்கு மாகாணம் நவம்பர் 1, 1974 18.41 7.11
புந்தல- வில்மன சூன் 30, 2006 33.39 12.89
தஹியாகல சூன் 7, 2002 26.85 10.37
எலஹேர- கிரிதல சனவரி 13, 2000 140.35 54.19
எலுவில்லாயாய தென் மாகாணம் செப்டம்பர் 11, 2009 1.86 0.72
கல் ஓயா பள்ளத்தாக்கு வட கிழக்கு கிழக்கு மாகாணம் பெப்ரவரி 12, 1954 124.32 48.00
கல் ஓயா பள்ளத்தாக்கு- தென் கிழக்கு கிழக்கு மாகாணம்

ஊவா மாகாணம்

பெப்ரவரி 12, 1954 152.81 59.00
கல்வேஸ் லேண்ட் மத்திய மாகாணம் மே 27, 1938 0.57 0.22
ஜெயன்டஸ் டேன்க் வட மாகாணம் செப்டம்பர் 24, 1954 43.30 16.72
கொடவாய மே 25, 2006 2.32 0.90
கிரேட் சொபர் ஐலேண்ட் கிழக்கு மாகாணம் சூன் 21, 1963 0.65 0.25
ஹொண்டுவ ஐலேண்ட் நவம்பர் 19, 1973 0.09 0.03
கஹல்ல- பல்லேகல மத்திய மாகாணம்

வடமத்திய மாகாணம்

வடமேல் மாகாணம்

சூலை 1, 1989 216.90 83.75
கலமேட்டிய லகூன் தென் மாகாணம் சூன் 28, 1984 25.25 9.75
கடகமுவ தென் மாகாணம்

ஊவா மாகாணம்

மே 27, 1938 10.04 3.87
கதிர்காமம் தென் மாகாணம்

ஊவா மாகாணம்

மே 27, 1938 8.38 3.23
கிம்புல்வன ஓயா வட மேல் மாகாணம் சூன் 21, 1963 4.92 1.90
கிரலகல தென் மாகாணம் செப்டம்பர் 8, 2003 3.10 1.20
கிரம அக்டோபர் 6, 2004 0.05 0.02
கொக்கிளாய் கிழக்கு மாகாணம்

வட மாகாணம்

மே 18, 1951 19.95 7.70
குடும்பிகல- பனாமா கிழக்கு மாகாணம் பெப்ரவரி 20, 2006 65.34 25.23
குருலு கல சப்ரகமுவ மாகாணம் மார்ச்சு 14, 1941 1.13 0.44
லிட்டில் சோபர் மாகாணம் கிழக்கு மாகாணம் சூன் 21, 1963 0.07 0.03
மடவம்பில செப்டம்பர் 21, 2007 12.18 4.70
மதுகங்கா சூலை 17, 2006 23.00 8.88
மதுனாகல தென் மாகாணம் சூன் 30, 1993 9.95 3.84
மீம்புல கந்த- நிட்டம்புவ அக்டோபர் 31, 1972 0.24 0.09
மகாகனந்தரவ வாவி வட மத்திய மாகாணம்
திசம்பர் 9, 1966 5.19 2.01
மிடின்துவ சூன் 6, 1980 0.01 0.00
மிகிந்தலை வட மத்திய மாகாணம் மே 27, 1938 10.00 3.86
முத்துராஜவெல Block I மேல் மாகாணம் அக்டோபர் 31, 1996 10.29 3.97
முத்துராஜவெல block 2 மேல் மாகாணம் அக்டோபர் 31, 1996 2.57 0.99
நிமலாவ தென் மாகாணம் பெப்ரவரி 18, 1993 10.66 4.12
பதவியா டேன்க் வட மத்திய மாகாணம் சூன் 21, 1963 64.75 25.00
பரப்புடுவ நுன்ஸ் ஐலேண்ட் தென் மாகாணம் ஆகத்து 17, 1988 1.90 0.73
பீக் வெல்டனர்ஸ் மத்திய மாகாணம்

சப்ரகமுவ மாகாணம்

அக்டோபர் 25, 1940 223.79 86.41
பொலன்னறுவ வட மத்திய மாகாணம் மே 27, 1938 15.22 5.87
ராவண நீர்வீழ்ச்சி ஊவா மாகாணம் மே 18, 1979 19.32 7.46
ரெகாவ மே 25, 2006 2.71 1.05
ரொக்கி ஸ்லெட் தென் மாகாணம் அக்டோபர் 25, 1940 0.01 0.00
ருமஸ்ஸல தென் மாகாணம் சனவரி 3, 2003 1.71 0.66
சகாமம் சூன் 21, 1963 6.16 2.38
சேனாநாயக்க சமுத்திரம் கிழக்கு மாகாணம்

ஊவா மாகாணம்
பெப்ரவரி 12, 1954 93.24 36.00
சேருவில அல்லை கிழக்கு மாகாணம் அக்டோபர் 9, 1970 155.40 60.00
சீகிரிய மத்திய மாகாணம்

வட மத்திய மாகாணம்
சனவரி 26, 1990 50.99 19.69
ஶ்ரீ ஜயவர்தன புர மேல் மாகாணம் சனவரி 9, 1985 4.49 1.73
தப்போவ வட மேல் மாகாணம் சூலை 19, 2002 21.93 8.47
தங்கமலே ஊவா மாகாணம் மே 27, 1938 1.32 0.51
தெல்வத்த தென் மாகாணம் பெப்ரவரி 25, 1938 14.25 5.50
திருகோணமலை நவல் ஹெட் வேர்க்ஸ் கிழக்கு மாகாணம்

வட மத்திய மாகாணம்
சூன் 21, 1963 181.30 70.00
உடவத்தகலே மத்திய மாகாணம் சூலை 29, 1938 1.04 0.40
வன்கலை செப்டம்பர் 8, 2008 48.39 18.68
வன்னிக்குளம் வட மாகாணம் சூன் 21, 1963 48.56 18.75
விக்டோரியா- ரன்தெனிகல - ரன்டம்பே மத்திய மாகாணம்

ஊவா மாகாணம்

சனவரி 30, 1987 420.87 162.50
வீரவில- திஸ்ஸ தென் மாகாணம் மே 27, 1938 41.64 16.08
வெல்ஹெல்ல கதேகில்ல சப்ரகமுவ மாகாணம் பெப்ரவரி 18, 1949 1.34 0.52
வில்பத்து வடக்கு வட மாகாணம்

வடமேல் மாகாணம்

பெப்ரவரி 25, 1938 6.32 2.44
மொத்தம் 2,779.54 1,073.19

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-26. பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.
  2. 2.0 2.1 "Sanctuaries". Department of Wildlife Conservation. Archived from the original on 2015-12-26. பார்க்கப்பட்ட நாள் 2019-07-11.

வெளி இணைப்புகள்[தொகு]