இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான் (அறிவியல் பெயர்: Hemipus picatus leggei) என்பது பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானின் துணையினம் ஆகும். இது இலங்கையின் மலைக்காடுகளில் காணப்படுகிறது.[1]

விளக்கம்[தொகு]

இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான் தோற்றத்திலும் பழக்க வழக்கங்களிலும் பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானை ஒத்தே இருக்கும். ஆனால் இது பால் ஈருருமை இல்லாமல் ஆண் பெண் என இரு பறவைகளும் ஒன்றுபோலவே இருக்கும்[2] (பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சான் பறவையில் பெண் பறவையின் முதுகு ஆண் பறவையின் முதுகு போல கறுப்பாக இல்லாமல் புகை கறுப்பாக இருக்கும்).

நடத்தை[தொகு]

இப்பறவைகளில் ஆண் பறவையும் பெண் பறவையும் மாறி மாறி குரல் எழுப்பி டூயட் பாடுவதாக அறியவருகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ali, S; S D Ripley (1996). Handbook of the birds of India and Pakistan. 6 (2nd ). Oxford University Press. பக். 1–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-562063-1. 
  2. Whistler, Hugh (1949). Popular handbook of Indian birds (4th ). Gurney and Jackson, London. பக். 144–145. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4067-4576-6. https://archive.org/stream/popularhandbooko033226mbp#page/n182/mode/1up. 
  3. Thorpe, W.H. (1972). Duetting and antiphonal song in birds – its extent and significance. Behaviour Monograph Supplement 18. E J Brill, Leiden. பக். 8.