பால் ஈருருமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால் ஈருருமை என்பது ஒரே சிற்றினத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலமைப்பில் முறையான வேறுபாடு உள்ளதாகும். ஒரு சிற்றினத்தில் பால் ஈருருமை, ஆண் பெண்ணிடையே உடலின் வண்ணத்தில் வேற்றுமை, உடலின் அளவில் வேற்றுமை, பெரிய இறகு அல்லது கொம்புகள்; தந்தங்கள் பெற்றிருதல் போன்றவையால் தீர்மானிக்கப்படுகிறது. இப்பண்பு பூச்சிகள், பாலூட்டிகள், ஈருடலிகள், மீன்கள், ஊர்வன எனப் பெரும்பாலான விலங்கினங்களில் காணப்படுகிறது.