இலங்கையர்கோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கையர்கோன் (இ. நவம்பர் 15, 1961) ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களில் ஒருவர் என்று பாரட்டுப் பெற்றவர். மணிக்கொடி, பாரததேவி, சக்தி, சூறாவளி, கிராம ஊழியன், சரஸ்வதி ஆகிய தமிழக இதழ்களிலும் ஈழகேசரி, தினகரன், ஈழநாடு, கலைச்செல்வி, வீரகேசரி ஆகிய ஈழத்து இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. இவர் விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு காட்டினார்.

பொருளடக்கம்

வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]

இவரது இயற்பெயர் த. சிவஞானசுந்தரம் என்பதாகும். ஈழத்து சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார்.

எழுத்துலகில் [தொகு]

பதினெட்டாவது வயதிலே இவரது முதற் கதையான ' மரிய மதலேனா' 1930களில் கலைமகள் இதழில் வெளியாகிற்று. சமஸ்கிருதம், இலத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் ஆழ்ந்த பயிற்சி பெற்றார். சேக்சுப்பியரின் எழுத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்தது. இதன் விளைவாக நிறைய ஒற்றையங்க, தொடர் நாடங்களை எழுதினார். அவற்றுட் பல இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்களை மகிழச்செய்தன. 'பச்சோந்திகள்', 'லண்டன் கந்தையா', 'விதானையார் வீட்டில்' 'மிஸ்டர் குகதாஸன்' ஆகியன மேடை நாடகங்களாயும் வெற்றிபெற்றன.

ஈழகேசரி, கலைச்செல்வி, ஈழநாடு, தமிழின்பம், வீரகேசரி, தினகரன் ஆகிய ஈழத்து இதழ்களிலும், கலைமள், சூறாவளி, மணிக்கொடி, பாரதத்தாய், சக்தி, சரஸ்வதி, ஆகிய தமிழக இதழ்களிலும் இவரது படைப்புக்க்கள் வெளியாகின.

முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியியுள்ளார். இவரது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய 'வெள்ளிப்பாதசரம்' என்ற ஒரே ஒரு தொகுதி 1962 ஆம் ஆண்டு வெளியாகிற்று. இவரது கதைகள் ' கதைக்கோவை' போன்ற திரட்டுகளில் அந்தக் காலத்திலேயே வெளியாகி உள்ளன.

பிறநாட்டுக் கதைகளையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலாக இவான் துர்க்கனேவின் ' முதற்காதல்' மட்டும் வெளிவந்துள்ளது.

'மாதவி மடந்தை', ' மிஸ்டர் குகதாஸன்' என்ற நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன.

வானொலி நாடகங்கள் [தொகு]

  • விதானையார் வீட்டில்
  • கொழும்பிலே கந்தையா
  • லண்டன் கந்தையா

வெளிவந்த நூல்கள் [தொகு]

Noolaham.gif
தளத்தில்
இலங்கையர்கோன் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • வெள்ளிப்பாதசரம் (சிறுகதைத் தொகுப்பு)
  • மாதவி மடந்தை (மேடை நாடகம்)
  • மிஸ்டர் குகதாசன் (நகைச்சுவை நாடகம்)
  • முதற்காதல் (மொழிபெயர்ப்பு நாவல்)
"http://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையர்கோன்&oldid=801074" இருந்து மீள்விக்கப்பட்டது