இலக்கணாவத்தை
இலக்கணாவத்தை என்பது யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சியில் உடுப்பிட்டித் தேர்தல் தொகுதியில் உள்ள ஒரு கிராமம்.
இலக்கணாவத்தை கிராமம் உடுப்பிட்டிச்சந்தியில் இருந்து வடகிழக்காக ஒரு மைல் தொலைவாகவும், வல்வெட்டித்துறையில் இருந்து தென் கிழக்காக ஒன்றரை மைல்கள் தொலைவிலும், பொலிகண்டியில் இருந்து தென்மேற்காக மூன்று மைல்கள் தொலைவாகவும், நெல்லியடியில் இருந்து வடமேற்காக இரண்டு மைல்கள் தொலைவிலும் இருக்கின்றது.
கிட்டத்தட்ட ஜம்பது குடும்பங்களை கொண்ட இந்த கிராமத்தில் கற்பகவிநாயகர் ஆலயம் உள்ளது. இவ் ஆலயத்தின் மேற்கு வீதியில் ஒரு ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் கீழ் அதாவது ஆலயத்தின் வடக்கு வீதியில் ஒரு சனசமூக நிலையமும் இருக்கின்றது.
வரலாறு [தொகு]
யாழ்ப்பாண வரலாற்றில் சமரபாகு தேவன் என்றவனின் ஆளுகையின் கீழ் இருந்ததால் இது சமரபாகு தேவன் குறிச்சி எனவும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் அப்பெயர் மருவல் அடைந்து தற்போது இலக்கணாவத்தை எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
இக்கிராமத்தவர்கள் [தொகு]
- இளையதம்பி ஆறுமுகம், சமயத் தொண்டர்
- உடுப்பிட்டியூர் யோகன்
இந்தக் கிராமம் பல தேசிய விடுதலைப் போராளிகளை அளித்திருக்கிறது. இந்த கிராமத்து மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில், குறிப்பாகக் கனடாவில் அதிகமாக வாழ்கின்றார்கள்.