இருபிளவுப் பரிசோதனை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபிளவுப் பரிசோதனை அல்லது யங் பரிசோதனை என்பது 1801 ம் ஆண்டு யங் அவர்கள் செய்த, ஒளியின் இயல்புகள் தொடர்பாக முக்கிய முடிவுகளை சுட்டிய பரிசோதனை ஆகும். இந்த பரிசோதனையில் அணுத் துகள்கள் அல்லது ஓரியல் அலைகள் இரு சிறு பிளவுகளுக்கால் செலுத்தப்படும் போது, எதிரில் உள்ளத் திரையில் அலைகளின் குறிக்கீட்டைக் காண முடிகிறது.
குவாண்டம் இயற்பியலில் இந்தப் பரிசோதனை ஒளியின் பிரிக்கமுடியாத அலை துகள் இயலைக் காட்டுகிறது.