இரிச்சர்டு எல்லிசு (வானியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  இரிச்சர்டு சாலிசுபரி எல்லிசு (Richard Salisbury Ellis) CBE FRS (பிறப்பு: 25 மே 1950) கோல்வின் பே வேல்சு இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் வானியற்பியல் பேராசிரியராக உள்ளார். இவர் முன்பு கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில்(கால்நெக்கில்) வானியல் சுட்டீல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு 2011 ஆம் ஆண்டில் அரசு வானியல் கழகத்தின் தங்கப் பதக்கமும் , 2022 ஆம் ஆண்டில் அரசு கழகத்தின் அரசப் பதக்கமும் 2023 ஆம் ஆண்டில் அண்டவியலில் குரூபர் பரிசும் வழங்கப்பட்டது.[1][2][3][4]

கல்வி[தொகு]

எல்லிசு இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் வானியல் பயின்று 1974 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் வொல்ப்சன் கல்லூரியில் மெய்யியல் பட்டயம் பெற்றார்.

ஆராய்ச்சியும் தொழிலும்[தொகு]

1985 ஆம் ஆண்டில் அவர் தர்காம் பல்கலைக்கழகத்தில் அரசு கிரீன்விச் ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகள் அவரது ஆராய்ச்சி பங்களிப்புகளுக்காக பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு பிளூமின் பேராசிரியராகச் சென்று மாக்தலீன் கல்லூரியில் பேராசிரியராக ஆனார். 1994 முதல் 1999 வரை வானியல் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார் , அந்த நேரத்தில் அவர் கால்டெக்கிற்கு சென்றார். கால்டெக்கிற்கு வந்த சிறிது நேரத்திலேயே அவர் பாலோமர் ஆய்வகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் , பின்னர் அவர் முப்பது மீட்டர் தொலைநோக்கியில் கால்டெக்கின் பங்கின் வளர்ந்து வரும் முதன்மைநிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கால்டெக் ஒளியியல் நோக்கீட்டகங்களாக மறுசீரமைத்தார். செப்டம்பர் 2015 இல் கால்டெக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு , இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (யு. சி. எல்) நடைபெற்ற ஐரோப்பிய ஆராய்ச்சி மன்ற உயர் ஆராய்ச்சி நல்கை வழி ஐரோப்பாவுக்குத் திரும்பினார்.

எல்லிஸ் முதன்மையாக அண்டவியல் நோக்கீட்டில் பணியாற்றுகிறார் , பால்வெளிகளின் தோற்றமும், படிமலர்ச்சியும் , அண்டப் பேரியல் கட்டமைப்பின் படிமலர்ச்சி, இருண்ட பொருளின் தன்மை, பகிர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு. நெடுந்தொலைவு பால்வெளிகளின் உருவாக்கமும் உருவவியலும் பற்றி ஆய்வு செய்யும் மார்ஃப்ஸ் ஒத்துழைப்புப் பணியில் அவர் பணியாற்றினார்.[5] இவர் ஈர்ப்பு வில்லை, உயர் செபெயர்ச்சி மீவிண்மீன் வெடிப்பு ஆகியவற்றின் பயன்பாடுகளில் சிறப்பு ஆர்வமுள்ளவர். அவர் மீவிண்மீன் வெடிப்பு அண்டடவியல் திட்டத்தில் உறுப்பினராக இருந்தார் , அதன் தலைவர் சவுல் பெர்ல்மட்டர் அண்ட முடுங்கியநிலை விரிவாக்கம் குறித்த குழுவின் சிறந்த கண்டுபிடிப்பிற்காக 2011 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். இவரது மிக அண்மைய கண்டுபிடிப்புகள் அண்டம் அதன் தற்போதைய அகவை அளவில் ஒரு சில விழுக்காட்டு அளவில் மட்டுமே இருந்தபோது காணப்பட்டதொடக்க காலப் பால்வெளிகளுக்கான தேடல்களுடன் தொடர்புடையவை.

கால்டெக்கில் 2000 முதல் 2005 வரை பாலோமர் நோக்கீட்டகத்தின் இயக்குநராக இருந்த எல்லிசு , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடைமுறையை உருவாக்குவதிலும் , முப்பத்து மீட்டர் தொலைநோக்கிக்கான கூட்டணியை உருவாக்குவதிலும் முதன்மை பங்கு வகித்தார் - கால்டெக் கலிபோர்னியா பல்கலைக்கழகம் , கனடா , ஜப்பான் , சீனா, இந்தியா ஆகியவை மௌனா கீ அவாய் தொலைநோக்கிபணிக்கு வித்திட்டன. இது கட்டி முடிக்கப்படும்போது வடக்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய தரை அடிப்படையிலான ஒளியியல், அகச்சிவப்பு தொலைநோக்கியாக இருக்கும்.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

1995 ஆம் ஆண்டில் அரசு கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 2008 ஆம் ஆண்டு புத்தாண்டு தகைமைகளில் பிரித்தானியப் பேரரசின் ஆணையின் தளபதியாகவும் , 2018 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய அறிவியல் கல்வ்க்கழக ஆய்வுறுப்பினராகவும் தொடர்பு உறுப்பினராகவும் பஇ அமர்த்தப்பட்டார்.

எல்லிசு பால்வெளிகள் பிறந்தபோது: அண்ட விடியலுக்கான தேடல் (பிரின்சுட்டன் பல்கலைக்கழக அச்சகம், 2022) எனும் நூலை எழுதினார். இதில் அவர் பால்வெளிகளை ஆய்வதில், எனவே அண்ட வரலாற்றின் மிக முந்தைய காலகட்டங்களையும் ஆய்வதில் தனது ஐந்து பத்தாண்டு கால வாழ்க்கையில் வானியலாளர்கள் செய்த நோக்கீட்டு முன்னேற்றத்தை விவரிக்கிறார். நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் இருளிலிருந்து முதல் தலைமுறை பால்வெளிகளின் தோற்றத்துடன், அதாவது,அண்ட விடியலைக் காணும் வாய்ப்புகளுடன் கதை முடிவடைகிறது.

உலகின் நவீன நோக்கீட்டகங்களில் ஜூலியன் ஆப்ராம்சின் பயன்படுத்திய பல பெரிய தொலைநோக்கிகளின் குறிப்பிடத்தக்க புகைப்படங்களின் தொகுப்புக்கும் எல்லிசு உரையை எழுதிப் பங்களித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Curriculum Vitae (MS Word)
  2. Lemonick, Michael D. (27 August 2006). "How the Stars Were Born". Time. Vol. 168, no. 10. pp. 42–51. Archived from the original on 12 December 2007. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  3. Royal Medal 2022
  4. Gruber Prize in Cosmology 2023
  5. "The Morphs" Durham University, United Kingdom