இராம் யத்னா சுக்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் யத்னா சுக்லா
Ram Yatna Shukla
பிறப்பு1932
பதோகி, உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிகல்வியாளர்
விருதுகள்கல்வி மற்றும் இலக்கியத்திற்காக பத்மசிறீ, விசுவ பாரதி விருது

இராம் யத்னா சுக்லா (Ram Yatna Shukla) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார்.1932 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இலவசமாக இவர் சமசுகிருதம் கற்பித்து வருகிறார். 2021 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் இலக்கியத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக இந்திய குடியரசுத் தலைவரால்[1] இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3] 2015 ஆம் ஆண்டு சமசுகிருத மொழியின் சிறந்த விருதான விசுவபாரதி விருதையும் சுக்லா பெற்றுள்ளார்.

இராம் யத்னா சுக்லா 1932 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் பதோகி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை இராம் நிரஞ்சன் சுக்லாவும் ஒரு சமசுகிருத அறிஞராவார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இவர் சமசுகிருத ஆச்சார்யாவாகப் பணியாற்றினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_யத்னா_சுக்லா&oldid=3775180" இலிருந்து மீள்விக்கப்பட்டது