இராம் சிங் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் சிங் பட்டேல்
Ram Singh Patel
சட்டமன்ற உறுப்பினர் உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்இராசேந்திர பிரதாப் சிங்
பதவியில்
2012–2017
முன்னையவர்இராசேந்திர பிரதாப் சிங்
பின்னவர்இராசேந்திர பிரதாப் சிங்
தொகுதிபட்டி, உத்தரப் பிரதேச சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1983
அரசியல் கட்சிசமாச்சுவாதி கட்சி
உறவுகள்தாதுவா (மாமா)
வீர் சிங் பட்டேல் (சகோதரன்)
பெற்றோர்
  • பால் குமார் பட்டேல் (father)
முன்னாள் கல்லூரிபெரோசு காந்தி கல்லூரி, சத்ரபதி சாகுச்சி மகராச் பல்கலைக்கழகம்
நர்வதேசுவர் சட்டக் கல்லூரி, லக்னோ பல்கலைக்கழகம்

இராம் சிங் பட்டேல் (Ram Singh Patel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1983 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் [1] பட்டி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை அதே தொகுதியில் பணியாற்றியுள்ளார் [2] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1,476 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சமாச்வாதி கட்சி உறுப்பினராக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டார். [3] அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தவறுகள் இருந்ததால் இவர் தோல்வியடைந்தார். பின்னர் மோதி சிங் சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அந்த இடம் காலியாக இருந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இராம் சிங் படேல் மிர்சாபூர் மக்களவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பால் குமார் பட்டேலின் மகனாவார். 2007 ஆம் ஆண்டு சூலை மாதம் 22 அன்று காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்த சிவ குமார் பட்டேலின் (தாதுவா) மருமகன் என்றும் அறியப்படுகிறார்.[4]

இவர் பெரோசு காந்தி கல்லூரியில் பயின்றார். முதுகலை பட்டம் பெற்றார். லக்னோவிலுள்ள நர்வதேசுவர் சட்டக் கல்லூரியில் படித்து சட்டப்பாடத்தில் பட்டமும் பெற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "प्रतापगढ़: सपा को तगड़ा झटका, जिलाध्यक्ष राम सिंह ने थामा कांग्रेस का दामन".
  2. "Ram Singh(Samajwadi Party(SP)):Constituency- PATTI (PRATAPGARH) - Affidavit Information of Candidate:".
  3. "Patti Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs".
  4. Hindustan Times
  5. "Ram Singh(Samajwadi Party(SP)):Constituency- PATTI(PRATAPGARH) - Affidavit Information of Candidate:". myneta.info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_சிங்_பட்டேல்&oldid=3825710" இலிருந்து மீள்விக்கப்பட்டது