இராமையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமையன் என்ற இராமப்பய்யன் மதுரை நாயக்க வம்சத்து மன்னர் திருமலை நாயக்கரின் படைத்தளபதியாகப் பணியாற்றியவர். இராமப்பய்யன் அம்மானை என்ற நாட்டுக் கதைப்பாடலின் கதைப்பொருள்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இராமையன் மன்னர் திருமலை நாயக்கரின் படையில் பணியாற்றிய அந்தணர் ஆவார்[1][2] கத்திச் சண்டையிடும் திறமையால் புகழடைந்த இவர் படிப்படியாக உயர்ந்து நாயக்க மன்னர்களின் படையின் தளபதியாக ஆனார்..[3]

மைசூருக்கு எதிரான போர்[தொகு]

இராமையனின் முதல் பெரும்போர் மைசூர் அரசின் படைத்தளபதி ஹரசுர நந்தி ராசா என்பவருடன் 1633 ஆம் ஆண்டு நடைபெற்றது. மதுரை நாயக்க அரசின் மீது படையெடுத்து திண்டுக்கல் வரை வந்த ஹரசுர நந்தி ராசாவை இராமையனும் கன்னிவாடி பாளையக்காரர் அரங்கண்ண நாயக்கரும் சேர்ந்து விரட்டி அடித்தனர்.

திருவிதாங்கூர் மீது 1634 - 1635 ஆம் ஆண்டு நாயக்கர் படை தொடுத்த போரிலும் இராமையன் பங்கு பெற்றார்.

இராமநாதபுரத்துக்கு எதிரான போர்[தொகு]

இராமநாதபுரம் சேதுபதி சடைக்கண். இவனுடைய முறைகேடாகப் பிறந்த சகோதரன் தம்பி ஆவான். 1639 ஆம் ஆண்டு தம்பி சடைக்கனுக்கு எதிராக புரட்சி செய்து அரசு கட்டிலை அடைய முயற்சித்தான்[3]. திருமலை மன்னர் இந்தப் புரட்சி வீரன் தம்பியை ஆதரித்து ஒரு பெரும்படையை இராமையன் தலைமையில் அனுப்பி வைத்தார்[3].

இந்த மறவர் மண்ணில் சேதுபதியின் மருமகன் வன்னி நடத்திய படையுடன் இராமையன் போரிட்டார்[2]. போர் ஐந்து மாதங்கள் நடந்தது[2]. வன்னி போரில் தோற்றான். சேதுபதியோ பாம்பன் தீவில் ஓடி ஒளிந்தான் பின்னர் பிடிபட்டு கைது செய்யப்பட்டான்[2].

இராமப்பய்யன் அம்மானை[தொகு]

இராமையன் 1639 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரில் காட்டிய வீரம் நாடறிந்த தமிழ் நாட்டுக் கதைப்பாடலான இராமப்பய்யன் அம்மானை கதைப்பொருளாக ஆக்கம் பெற்றுள்ளது.[2]. இந்தக் கதைப்பாடலில் சடைக்கண் தொடக்கத்தில் இராமையனை இழிவாக கேலி செய்கிறான்.

சடைக்கனின் பலம் அவருக்குத் தெரியாதா?
என்ன நடக்குமென்று அவருக்குத் தெரியாதா?
யார் என்னைத் தோற்கடிக்க முடியும்?
இங்கு வந்துள்ள அந்த அந்தணனின் கண்களைப் பிடுங்கவிட்டால் நான் எப்படி சடைக்கனாவேன்? நான் எப்படி வீரனாவேன்?
நான் எப்படிசடைக்கனாவேன் நான் கோழையல்லவா?
அவருடைய தலை குடுமியில் ஒரு தேங்காயைக் கட்டி அதோடு சேர்த்து துண்டுதுண்டாக உடைக்காவிட்டால்
இந்த உலகம் பார்க்க[3]

போர் முடிவுற்ற பின்பு இராமையன் மன்னர் திருமலை நாயக்கருக்கு அடியில் கண்டவாறு செய்தி அனுப்புகிறார்::

தங்களை இழிவாகப் பேசியவனை மதுரையின் நுழைவாயிலிலேயே மண்டியிடச் செய்தேன்.
இந்த உலகத்தில் உள்ள மன்னர்கள் யாவரும் தங்களைப் பணிந்து அவர்கள் கைகளால் கப்பம் கட்ட வேண்டுமல்லவா?[2]

இறப்பு[தொகு]

இராமையன் இராமநாதபுரம் போரில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இறந்துவிடுகிறார். இவருடைய மரணம் 1639 ஆம் ஆண்டுக்கும் 1648 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வாய்புள்ளது...

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமையன்&oldid=3739582" இலிருந்து மீள்விக்கப்பட்டது