இரன்பீர் காலேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 ஆம் ஆண்டில் இரன்பீர் காலேகா

இரன்பீர் காலேகா (Ranbir Kaleka) இந்தியாவின் புது தில்லியை தளமாகக் கொண்ட ஒரு சமகால இந்திய பல் ஊடக கலைஞர் ஆவார். இவரது படைப்புகள் பெரும்பாலும் விலங்குகள், பாலியல் மற்றும் பாரம்பரியத்தின் கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளன. ஆரம்பத்தில் இவர் ஓர் ஓவியராக பயிற்சி பெற்றார். பின்னர் இவரது படைப்புகள், சோதனை திரைப்பட கதை காட்சிகளுக்குள் இரு பரிமாண வன்துணிகளில் அதிகளவில் இயங்கு படங்களாக்கப்பட்டுள்ளன. மேலும் பல முக்கிய பன்னாட்டு கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியக இடங்களில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.[1][2][3][4]

2007 ஆம் ஆண்டில், சிகாகோவின் இசுபெர்டசு அருங்காட்சியகத்தின் மூத்த இயூடைக்கா கண்காணிப்பாளரான முனைவர் பெலிசிட்டாசு ஐமான்-இயெலைங்கு, பேரினப் படுகொலை நினைவுச்சின்னத்தை உருவாக்க இரன்பீர் காலேகாவை நியமித்தார். இத்தளம் சார்ந்த கணொலி நிறுவல் "கருதுக" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இத்தலைப்பு பிரிமோ லெவியின் இதே பெயரின் கவிதையால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைப்பாகும். நிறுவல் இரண்டு முன்னிறுத்தல்களைக் கொண்டுள்ளது. ஒன்ரு ஓவியம் மற்றொன்று வாய்வழி சாட்சியத்தின் ஒலிவடிவ விவரிப்பு என்பன அவ்விரண்டு முன்னிறுத்தல்களாகும். [5][6][7][8]

2002 ஆம் ஆண்டில், இரன்பீர் காலேகா, ஆசுத்திரியாவின் வியன்னாவில் உள்ள குன்சுடால்லே நகரத்தில் நடைபெற்ற கேபிடல் மற்றும் கர்மா என்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.[9]

1979 ஆம் ஆண்டில் டெல்லி லலித் கலா அகாடமி ஏற்பாடு செய்த 22 ஆவது தேசிய கலை கண்காட்சியில் இரன்பீர் காலேகாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்கி சிறப்பித்தார்.[10] 2005 ஆம் ஆண்டில் 51 ஆவது வெனிசு நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்ற இந்திய சமகால கண்காட்சியில் காலேகா தன்னுடைய படைப்புகளைக் காட்சிப்படுத்தினார்.[11][12] 2019 ஆம் ஆண்டில் பஞ்சாப் கலை மன்றம் மற்றும் பஞ்சாப் லலித் கலா அகாதமி ஆகியவற்றால் பஞ்சாப் கௌரவ் சன்மான் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. Oberhollenzer, Gunther (2009). Chalo! India: A New Era of Indian Art. 
  2. Sambrani, Chaitanya (2005). Edge of Desire: Recent Art in India. Palgrave Macmillan. பக். 127–129. https://archive.org/details/edgeofdesirerece0000samb. 
  3. Cotter, Holland (21 October 2005). "Art in Review; Ranbir Kaleka". New York Times. https://www.nytimes.com/2005/10/21/arts/art-in-review-ranbir-kaleka.html. பார்த்த நாள்: 14 June 2017. 
  4. Malhotra, Priya (May–June 2008). "Ranbir Kaleka at Bose Pacia". Asian Art News: 157. 
  5. Roy, Tania (2013). Armitage, John; Bishop, Ryan. eds. History of the "Mise en Abyme of the Body": Ranbir Kaleka and the "Art of Auschwitz" after Virilio in Virilio and Visual Culture. Edinburgh: Edinburg University Press. பக். 102–127. 
  6. Cohen, Richard, தொகுப்பாசிரியர் (2012). Visualizing and Exhibiting Jewish Space and History. Oxford: Oxford University Press. பக். 231. 
  7. Kaplan, Brett Ashley (2010). Landscapes of Holocaust Postmemory. Routledge. பக். 141. 
  8. Cohen, Sharon (2 April 2008). "The Arts: A Museum of Great Reflection". பார்க்கப்பட்ட நாள் 4 August 2017.
  9. "Kapital & Karma | Art since 1945 | Hatje Cantz". www.hatjecantz.de. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  10. Nath, Aman (10 January 2014). "I am not a surrealist painter: Ranbir Singh Kaleka". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.
  11. Archive, Asia Art. "iCon: India Contemporary". aaa.org.hk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  12. "Commemorazione dei defunti e dei Caduti di tutte le guerre e Festa dell'Unità nazionale: il programma delle iniziative". www.comune.venezia.it. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
  13. "A Moment in Time". The Indian Express (in Indian English). 2019-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.

நூலடைவு[தொகு]

Roy, Tania. "At the Borders Of Painting: Labor and the Migratory Screen-Art of Ranbir Kaleka", Migrating Minds. Journal of Cultural Cosmopolitanism, 1(1), Fall 2023.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரன்பீர்_காலேகா&oldid=3937322" இலிருந்து மீள்விக்கப்பட்டது