இரண்டாம் தோரமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் தோரமணன்
அல்கான் ஹூண ஆட்சியாளர்
தனது நாணயங்களின் இரண்டாம் தோரமணன்.
இரண்டாம் தோரமணன் is located in South Asia
இரண்டாம் தோரமணன்
இரண்டாம் தோரமணனின் தோராயமான ஆட்சிப் பகுதி
ஆட்சிக்காலம்6ஆம் நூற்றாண்டு

இரண்டாம் தோரமணன் (Toramana II) என்பவர் வடமேற்கு இந்தியாவின் காந்தாரதேசம், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 6-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அல்கோன் ஹூன வம்சத்தின் ஹூன அரசன் ஆவார்.[1]

நெசாக்களுடன் மோதல்[தொகு]

பொ.ச. 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அல்கோன்கள், இந்தியாவின் மையப்பகுதியை விரிவாக ஆக்கிரமித்த பின்னர், காஷ்மீர், பஞ்சாப் மற்றும் காந்தாரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து பின்வாங்கி, கைபர் கணவாய் வழியாக மேற்கு நோக்கிச் சென்று காபுலிஸ்தானில் குடியேறினர். இதன் மூலம் அல்கான்களுக்கும் காபுலிஸ்தானில் இருந்த நெசாக்கர்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இவர் நெசாக்கர்களின் நாணயங்களை தனது சொந்த நாணயமாக பயன்படுத்தினார். அதே நேரத்தில் காந்தாரத்தில் அச்சிடப்பட்ட சில நாணயங்களில் நெசாக் காளையின் தலையை தனது சொந்த கிரீடத்தில் ஏற்றுக்கொண்டார். [2]

இவரது நாணயங்களில் இருக்கும் எழுத்துகள் முன்பு "சிறீநர" என்றும் "நர" என்று தவறாகப் படிக்கப்பட்டது. இது " நரனா" அல்லது "நரேந்திரன்" என்ற அல்கோன் ஹுன அரசர் இருந்ததாக பரிந்துரைகளுக்கு வழிவகுத்தது. [2] 2013 ஆம் ஆண்டு மத்தியாஸ் பிஸ்டரரின் ஆய்விலிருந்து, இந்த நாணயங்களில் தோரா" என்று படிக்கப்பட வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [2] மைக்கேல் ஆல்ராமின் கூற்றுப்படி, "நரனா" அல்லது "நரேந்திரன்" என்று கூறப்படும் மன்னர் "மாற்று இல்லாமல் நீக்கப்பட வேண்டும்". [2]

காபுலிஸ்தானில் கிடைத்துள்ள இவரது நாணயங்களில் பொதுவாக "மரியாதைக்குறிய மன்னன் தோரா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[3] அவற்றுள் சில நெசாக்குகளின் சில நாணயங்கள் மீது இவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.[4][5][6][7]

நாணயம்[தொகு]

காஷ்மீரின் இரண்டாம் தோரமனன்[தொகு]

காஷ்மீரிலிருந்து கிடைத்துள்ள மிகவும் அதிநவீன வகை நாணயங்கள் "தோரமனன்" என்ற பெயரைக் கொண்டுள்ளன. மேலும் நாணயவியல் ஆய்வுகளில் பெரும்பாலும் "இரண்டாம் தோரமனன்" என்று அழைக்கப்படுகிறது. இது பொ.ச.6-7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேதியிட்டது. இந்த நாணய வகை மற்றொரு ஆட்சியாளரான காஷ்மீரின் தோரமனனுக்குச் சொந்தமானது. இவர் காஷ்மீரில் இருந்த அல்கோன் ஹுனர்களின் பரம்பரையாக இருக்கலாம். [8] மேலும் கல்கணரின் இராஜதரங்கிணியில் குறிப்பிடப்பட்டுள்ள கோனாண்டா வம்சத்தின் (II) "தோரமனனுடன்" தொடர்பு இருக்கலாம்.

சான்றுகள்[தொகு]

  1. Alram 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 Alram 2014, ப. 278.
  3. Alram, Michael. "The Countenance of the Other". Kunsthistorisches Museum Vienna.
  4. Alram, Michael. "The Countenance of the Other". Kunsthistorisches Museum Vienna.
  5. Alram, Michael. "The Countenance of the Other". Kunsthistorisches Museum Vienna.
  6. Alram, Michael. "The Countenance of the Other". Kunsthistorisches Museum Vienna.
  7. Alram, Michael. "The Countenance of the Other". Kunsthistorisches Museum Vienna.
  8. Cribb, Joe (1 April 2017). "Early Medieval Kashmir Coinage – A New Hoard and An Anomaly". Numismatic Digest volume 40 (2016): 99. https://www.academia.edu/32663187/Early_Medieval_Kashmir_Coinage_A_New_Hoard_and_An_Anomaly. "இந்த காலகட்டத்தில் காஷ்மீரின் ஆட்சியாளர்கள் 4 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வடமேற்கு இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட ஹூன மன்னர்களின் வழித்தோன்றல்களாக இருந்திருக்கலாம்."". 

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_தோரமணன்&oldid=3403949" இலிருந்து மீள்விக்கப்பட்டது