இரட்டை பௌலைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரட்டை பௌலைன்
Doublebowline.jpg
பெயர்கள் இரட்டை பௌலைன், வட்டத் திருப்ப பௌலைன், இரட்டை முடிச்சு பௌலைன்
வகை தடம்
செயற்றிறன் 70-75%
தொடர்பு பௌலைன், நீர் பௌலைன், Double sheet bend, இடைக்கயிற்று பௌலைன்
பொதுப் பயன்பாடு மலையேற்றம்
ABoK #1013

இரட்டை பௌலைன் (Double bowline) அல்லது வட்டத் திருப்ப பௌலைன் (round turn bowline) என்பது ஒரு தடவகை முடிச்சு ஆகும். பொதுவான பௌலைனின் ஒற்றைத் திருப்பத்துக்குப் பதிலாக இரட்டை பௌலைனில் வட்டத் திருப்பம் பயன்படுகிறது. இது பொதுவான பௌலைனிலும் கூடுதலான பாதுகாப்பான தடத்தை உருவாக்க உதவுகிறது.[1][2]

பெயர்[தொகு]

கிளிபர்ட் ஆசிலி இதனை "இரட்டை பௌலைன்" என்று குறிப்பிட்டாலும், இப்பெயர் இன்னொரு முடிச்சான இடைப்பகுதி பௌலைன் என்பதற்கும் பொருத்தமாக அமையும். இதனால் சிலர் இம்முடிச்சுக்கு மேலே தரப்பட்டுள்ள மாற்றுப் பெயர்களில் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். இன்னொரு மூலத்தில், இரட்டை பௌலைன் என்னும் பெயர் நடுக்கயிற்றில் பொதுவான பௌலைன் முடிச்சிட்டுக் கட்டப்படும் தடத்தைக் குறிப்பிடப் பயன்பட்டுள்ளது.

கட்டும்முறை[தொகு]

பயன்பாடு[தொகு]

"இரட்டை பௌலைன்" மலையேறுவோர் அதிகமாகப் பயன்படுத்தும் இரண்டு முடிச்சுக்களில் ஒன்று. மற்றது எட்டு வடிவ முடிச்சு. விழுவதினால் முடிச்சில் அதிக சுமை சுமத்தப்பட்டாலும், இரட்டை பௌலைனை சுலபமாக அவிழ்த்துவிடலாம். எட்டு வடிவ முடிச்சில் இது கடினமானது என்பதால் இரட்டை பௌலைனுக்கு இது ஒரு சாதகமான இயல்பு ஆகும். ஆயினும் இம் முடிச்சு எட்டு வடிவ முடிச்சிலும் பாதுகாப்புக் குறைவானது.

குறிப்புகள்[தொகு]

  1. Ashley, Clifford W. (1944), The Ashley Book of Knots, New York: Doubleday, p. 186 
  2. Dave Root (2006-11-17). "The Most Useful Rope Knots for the Average Person to Know: Single-Loop Knots". பார்த்த நாள் 2009-04-06.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_பௌலைன்&oldid=1546041" இருந்து மீள்விக்கப்பட்டது