இடைப்பகுதி பௌலைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இடைப்பகுதி பௌலைன் | |
| வகை | தடம் |
|---|---|
| தொடர்பு | இரட்டை பௌலைன் |
| அவிழ்ப்பு | இறுகாதது |
| பொதுப் பயன்பாடு | கயிறொன்றின் நடுப்பகுதியில் தடம் போடுதல். |
| ABoK | #1080 |
இடைப்பகுதி பௌலைன் என்பது கயிறு ஒன்றின் இடைப்பகுதியில் இரண்டு நிலையான அளவு கொண்ட தடங்களை உருவாக்குவதற்கான முடிச்சு ஆகும். தடங்கள் வழுக்காமல் இருப்பதும், சுமையேற்றிய பின்பும் அவிழ்ப்பதற்கு இலகுவாக இருப்பதும் இம் முடிச்சின் நன்மைகள் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] முடியும் நுட்பம்
கயிற்றின் இடைப்பகுதியில் வழமையான முறையில் பௌலைன் முடிச்சு இடப்படும் (இடது பக்கப் படம்). ஆனாலும், மடிப்புப்பகுதியை நிலை முனையைச் சுற்றி எடுத்து மீண்டும் அதற்கு அருகிலேயே செருகி முடிக்கப்படுவது இல்லை. அதற்குப் பதிலாக, மடிப்புப் பகுதியை விரித்து முழு முடிச்சுமே அதனூடாகச் செலுத்தப்படும் (வலது பக்கப் படம்). முடிச்சை இறுக்கும்போது மடிப்புப்பகுதி இரண்டு நிலை முனைகளையும் சுற்றி அமையும் (மேலுள்ள படம்).