இம்பாபா பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெய்ரோ இம்பாபா பாலம்

இம்பாபா பாலம் (Imbaba Bridge) எகிப்து நாட்டின் கெய்ரோ நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய இரயில்வே பாலமாகும். நைல்நதியின் குறுக்கே இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. அசுவான் அணையிலிருந்து 935 கிலோமீட்டர்கள் (581 மைல்) கீழ்நோக்கி அமைந்துள்ளது.[1] இம்பாபா பாலம் மட்டுமே தற்போது கெய்ரோவில் நைல் நதியின் குறுக்கே உள்ள ஒரே இரயில்வே பாலமாகும்.[2] பாலத்தின் தற்போதைய பதிப்பு 1912 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பெல்சிய நிறுவனமான பாம்-மார்பென்ட் என்ற நிறுவனத்தால் கட்டப்பட்டது.[3] பாலத்தின் முதல் கட்டுமானம் 1891 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கிசா இரயில் நிலையத்தை நோக்கி மேற்கே நைல் நதியைக் கடக்கும் வகையில் இந்த இரயில்வே பாலம் வடிவமைக்கப்பட்டது. [2][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sadek, Nahla. Flood Effects on Local Scour at Imbaba Bridge. 
  2. 2.0 2.1 Travel Cairo, Egypt. Boston: MobileReference.com. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1605010557.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Ramadan, Ahmed (12 November 2010). "Streets of Cairo: The bridges over troubled water". Egypt Independent. http://www.egyptindependent.com/news/streets-cairo-bridges-over-troubled-water. பார்த்த நாள்: 9 March 2014. 
  4. "Old Imbaba Bridge, 1890". Cairobserver. பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பாபா_பாலம்&oldid=3659977" இலிருந்து மீள்விக்கப்பட்டது