இனமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இனமொழி என்பது ஓர் இலக்கணக் குறியீடு. தொல்காப்பியம், பரிமாணம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

  • எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்தே [1]
  • விதந்த மொழி இனம் வேறும் செப்பும் [2]
  • ஒருமொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே [3]

விளக்கம்[தொகு]

  • மேலைச்சேரிக் கோழி அலைத்தது எனின் கீழூச்சேரிக் கோழி அலைப்புண்டது என்பது பெறப்பட்டது
  • குடம் கொண்டான் வீழ்ந்தான் என்றவழிக் குடமும் வீழ்ந்தது என்பதாயிற்று. இது இனம் செப்பிய மொழி. [4]
  • சோறு உண்டான் என்றால் சோற்றோடு சேர்த்துக் குழம்பு முதலானவற்றையும் உண்டான் என அதன் இனத்தையும் குறிப்பிடுகிறது.
  • நஞ்சுண்டான் சாம் என்னும்போது நஞ்சுண்டாள் சாம் என அதன் இனத்தையும் குறித்தது.
  • வெற்றிலை போட்டுக்கொண்டான் என்றால் பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றையும் போட்டுக்கொண்டான் என்பதை உணர்த்துவது இனமொழி [5]
  • பார்ப்பான் கள் உண்ணான் என்றவழி பார்ப்பினி கள்ளுண்ணாள் என அதன் இனத்தையும் குறித்தது. [6]

தொடர் வேறுபாடு காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் 2-61
  2. பரிமாணம் நூற்பா
  3. நன்னூல் 358
  4. மேலவை இரண்டும் தொல்காப்பிய நூற்பாவுக்கு இளம்பூரணர் தந்துள்ள மேற்கோள் விளக்கம்
  5. மேலவை மூன்றும் ஆறுமுக நாவலர் நன்னூல் காண்டிகை உரை
  6. நன்னூல் மயிலைநாதர் உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனமொழி&oldid=1560979" இலிருந்து மீள்விக்கப்பட்டது