இந்தியாவில் உயர்கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம்

இந்தியா பொது நிதியுதவி பெறும் உயர்கல்வி முறையைக் கொண்டுள்ளது, இது உலகிலேயே மூன்றாவது பெரியது ஆகும். [1] பல்கலைக்கழக மானியக் குழுவானது, இதன் தரநிலைகளைச் செயல்படுத்தி அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. [2] உயர்கல்விக்கான அங்கீகாரங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) நிறுவப்பட்ட 15 தன்னாட்சி நிறுவனங்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது. [3]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 8.15% (98.615 மில்லியன்)  இந்தியர்களில் பட்டதாரிகள் உள்ளனர், சண்டிகர் மற்றும் டெல்லி ஒன்றியப் பகுதிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன, அவர்கள் மக்கள் தொகையில் முறையே 24.65% மற்றும் 22.56% பட்டதாரிகள் உள்ளனர். [4] 2000-01 முதல் 2010-11 வரையிலான ஒரு தசாப்தத்தில் கிட்டத்தட்ட 20,000 கல்லூரிகள் மற்றும் 8 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களைச் சேர்ப்பதன் மூலம் இந்திய உயர்கல்வி முறை பரவலாக வேகமாக விரிவடைந்துள்ளது. [5] [2]

வரலாறு[தொகு]

கிமு 1000 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் உயர்கல்வி முறை இருந்ததாக நம்பப்படுகிறது [6] பிரித்தானிய காலனித்துவவாதிகள் பல்கலைக்கழக அமைப்பை கலாச்சார காலனித்துவத்தின் ஒரு கருவியாக பயன்படுத்தினர். [6] உயர்கல்வியில் காலனித்துவ முயற்சிகள் ஆரம்பத்தில் கிழக்கிந்திய கம்பெனி மூலமாகவும், அதைத் தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்றம் மூலமாகவும் பின்னர் நேரடியாக பிரித்தானிய ஆட்சியின் மூலமகாவும் மேற்கொள்ளப்பட்டன. [7] பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்ட முதல் உயர்கல்வி நிறுவனம் 1781 இல் கல்கத்தா மதராஸ் ஆகும். இதைத் தொடர்ந்து 1784 இல் வங்காளத்தின் ஆசியச் சமூகம், 1791 இல் பெனாரஸ் சமஸ்கிருதக் கல்லூரி மற்றும் 1800 இல் கோட்டை வில்லியம் கல்லூரி ஆகியவற்றை நிறுவியது. [8] [7] 1813 இன் சாசனச் சட்டத்தின் மூலம், பிரித்தானிய நாடாளுமன்றம் இந்தியக் கல்வியை அரசின் கடமைகளில் ஒன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. [8] அதே சட்டம் பிரித்தானிய இந்தியாவில் மிசனரி பணிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது, இதனால் [7] தாமஸசு பாபிங்டன் மெக்காலேயின் பிரபலமான சர்ச்சைக்குரிய "மினிட் ஆன் எஜுகேசன்" கிழக்கத்திய கல்வியில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.[7] 1857 இல், முதல் மூன்று அதிகாரப்பூர்வ பல்கலைக்கழகங்கள் பம்பாய் (மும்பை), கல்கத்தா (கொல்கத்தா) மற்றும் மெட்ராஸ் (சென்னை) ஆகியவற்றில் தொடங்கப்பட்டன. 1882 இல் பஞ்சாப் பல்கலைக்கழகமும், 1887 இல் அலகாபாத் பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டன. இப்பல்கலைக்கழகங்கள் இலண்டன் பல்கலைக்கழகத்தின் மாதிரியாக உருவாக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் மானுடவியில் பிரிவுகளில் கவனம் செலுத்தியது.

சான்றுகள்[தொகு]

  1. "India Country Summary of Higher Education" (PDF). World Bank. பார்க்கப்பட்ட நாள் 24 October 2010.
  2. 2.0 2.1 India 2009: A Reference Annual (53rd edition), 237
  3. "Higher Education, National Informatics Centre, Government of India". Education.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
  4. . http://www.thehindu.com/news/national/only-815-of-indians-are-graduates-census-data-show/article7496655.ece. 
  5. http://www.dreducation.com/2012/06/latest-statistics-indian-higher.html. {{cite web}}: Missing or empty |title= (help)
  6. 6.0 6.1 Chitnis, Suma (3 February 2000). "Higher Education in India". Black Issues in Higher Education 16: 28. ProQuest 194193481. 
  7. 7.0 7.1 7.2 7.3 {{cite book}}: Empty citation (help)
  8. 8.0 8.1 {{cite book}}: Empty citation (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_உயர்கல்வி&oldid=3823014" இலிருந்து மீள்விக்கப்பட்டது