இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) 1969ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அனைத்திந்திய பொதுவுடமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவால் நிறுவப்பட்டது. உருசிய பொதுவுடமைத் தலைவர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22 அன்று கொல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் கானு சன்யால் இக்கட்சியின் துவக்கத்தை அறிவித்தார்.