இந்தியத் தொழில்முறை குத்துச்சண்டை சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சங்கம்
Indian Professional Boxing Association
சுருக்கம்IPBA
உருவாக்கம்2015
வகைஇலாப நோக்கமற்ற நிறுவனம்
நோக்கம்குத்துச்சண்டை ஒப்பளிப்பு அமைப்பு
தலைமையகம்புது தில்லி
சேவை பகுதி
இந்தியா
உறுப்பினர்கள்
WBA, WBO, IBF and PABA
President
Shahe Ali
மைய அமைப்பு
General Assembly
வலைத்தளம்www.ipbaboxing.com

இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் (Indian Professional Boxing Association) என்பது இந்தியாவில் தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளை ஆளுமை செய்யும் ஒரு சபை ஆகும். தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகள், விருதுகள், தேசிய மற்றும் துணை குத்துச்சண்டை வெற்றியாளர் பட்டங்களுக்கு ஒப்பளிப்பு அளிக்கிறது. உலக குத்துச்சண்டை சங்கம், உலக குத்துச்சண்டை அமைப்பு, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் பான் ஆசிய குத்துச்சண்டை சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர் அமைப்பாக உள்ளது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் குத்துச்சண்டைப் போட்டிகள் எதையும் இந்த அமைஅப்பு அங்கீகரிக்கவில்லை.

வரலாறு[தொகு]

2015 ஆம் ஆண்டு இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் தில்லியில் உருவாக்கப்பட்டது. இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சங்கத்தின் தலைவர் திரு. சாகே அலி, சங்க உருவாக்கத்திற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார். இச்சங்கம் நிறுவப்பட்டதன் மூலம், விளையாட்டில் மீண்டும் கவனத்தை ஈர்க்க ஒரு வலுவான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் இந்திய அரசாங்கத்தின் பெறுநிறுவன விவகார அமைச்சகத்தில் பிரிவு 8 நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இவ்வமைப்பின் நோக்கமும் முயற்சிகளும் இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டை மற்ற பிரபலமான விளையாட்டுகளுக்கு இணையாக கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மீள்பார்வை[தொகு]

இந்தியாவில், குத்துச்சண்டைக்கு ஒரு பெரிய இரசிகர் பட்டாளம் இல்லை. பன்னாட்ட்டு அளவில் இந்தியக் குத்துச்சண்டையின் வெளிப்பாட்டின் குறைபாடு இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. உலகளாவிய வெற்றியாளர் போட்டிகளில் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகள் இருந்தபோதிலும், இந்திய தடகள வீரர்கள் தொடர்ந்து ஆசிய மற்றும் பொதுநலவாய விளையாட்டுகளில் பதக்கங்களை வென்றுள்ளனர். 1950 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் தேசிய குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டியிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை தொழில்முறை குத்துச்சண்டை வீரர்களுக்கான எந்த தளத்தையும் இந்தியா நிறுவவில்லை. 65 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்தியா தொழில்முறை குத்துச்சண்டையில் அடியெடுத்து வைத்தது.

தொழில்சாரா குத்துச்சண்டையில் இருந்து தொழில்முறை குத்துச்சண்டை உலகிற்கு இந்திய தடகள வீரர்களின் மாற்றத்தை ஒரு சுமூகமான விவகாரமாக மாற்றுவது இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சங்கத்தின் முக்கிய விருப்பமாகும். இந்தியாவில் தேசிய அளவில் தொழில்முறை குத்துச்சண்டையை நிர்வகித்து இச்சங்கம் ஊக்குவிக்கும். இந்திய வல்லுநர்கள் பன்னாட்டு மட்டத்திலும் தங்கள் இருப்பை உணர வைப்பதை உறுதி செய்யும். விளையாட்டு உலகில் குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் இடமாக இந்தியாவை உலகம் பார்க்க வேண்டும் என்று இச்சங்கம் விரும்புகிறது.

இணைப்பு சங்கங்கள்[தொகு]

உலக குத்துச்சண்டை சங்கம், உலக குத்துச்சண்டை அமைப்பு, பன்னாட்டு குத்துச்சண்டை கூட்டமைப்பு, தொழில்முறை குத்துச்சண்டை ஆணைய சங்கம், யூரேசிய குத்துச்சண்டை நிறுவனம் மற்றும் ஆசிய குத்துச்சண்டை சங்கம் ஆகியவற்றுடன் இந்திய தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் இணைந்து செயல்படுகிறது.

  • உலக குத்துச்சண்டை சங்கம்
  • உலக குத்துச்சண்டை அமைப்பு [1]

  • பன்னாட்டு குத்துச்சண்டை கூட்டமைப்பு
  • தொழில்முறை குத்துச்சண்டை ஆணைய சங்கம்[2][3]

  • யூரேசிய குத்துச்சண்டை நிறுவனம்

தொடர்புடைய நபர்கள்[தொகு]

எவாண்டர் ஓலிஃபீல்டு இந்தியாவில் குத்துச்சண்டையை ஊக்குவிக்க இச்சங்கத்துடன் இணைந்துள்ளார்.
  • எவாண்டர் ஓலிஃபீல்டு[4][5][6]
  • எசு.எம். கான்

மேற்கோள்கள்[தொகு]

  1. "WBO poised to make moves in India in 2016". Wboboxing.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
  2. "APBC Member Countries & Commissions". Apbcboxing.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
  3. "IPBA registered as Regular Member with Association of Professional Boxing Commissions". Apbcboxing.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
  4. "Boxing Legend Evander Holyfield set to visit India to promote Professional Boxing". Sportstarlive.com. Archived from the original on 2020-02-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.
  5. "इवांडर होलीफील्ड ने IPBA का न्योता स्वीकारा, जल्द आएंगे भारत. प्रोफेशनल बॉक्सिंग को मिलेगा बढ़ावा". Mhone.in. Archived from the original on 2020-02-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-10.
  6. "Indian Professional Boxing Association Invites Superstar Holyfield". Asiannewsagency.com. Archived from the original on 2019-03-14. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.

புற இணைப்புகள்[தொகு]