இக்வா பன்னாட்டு வளாகம்

ஆள்கூறுகள்: 25°04′51″N 121°33′34″E / 25.08083°N 121.55944°E / 25.08083; 121.55944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்வா பன்னாட்டு வளாகம்
Yihwa International Complex
西華富邦


தகவல்
அமைவிடம் சோங்சான் மாவட்டம், தாய்பெய், தைவான்
ஆள்கூறுகள் 25°04′51″N 121°33′34″E / 25.08083°N 121.55944°E / 25.08083; 121.55944
நிலை நிறைவு
தள எண்ணிக்கை கோபுரம் A & B: 45
கோபுரம் C: 42
தளப் பரப்பு 203,963.86 m2 (2,195,448.7 sq ft)
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் டிபிஐ வடிவமைப்பு நிறுவனம்

இக்வா பன்னாட்டு வளாகம் (Yihwa International Complex) தைவானின் தாய்பெயில் உள்ள சோங்சான் மாவட்டத்தில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடங்களில் ஒன்றாகும். இந்த வளாகம் மூன்று வானளாவிய கட்டடங்களைக் கொண்டுள்ளது: ஏ மற்றும் பி கோபுரங்கள் 160 மீட்டர் உயரம் கொண்ட குடியிருப்பு இரட்டை வானளாவிய கட்டடங்களாகும். ஒவ்வொரு கோபுரமும் நான்கு அடித்தள நிலைகளுடன் தரையில் இருந்து 45 தளங்களைக் கொண்டுள்ளன. சி கோபுரமானது 150 மீட்டர் உயரம் கொண்ட ஒரு வானளாவிய விடுதியாகும். இக்கோபுரம் நான்கு அடித்தள நிலைகளுடன் தரையில் இருந்து 42 மாடிகளைக் கொண்டுள்ளது. இக்கோபுரங்கள் 2014 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாத நிலவரப்படி சோங்சான் மாவட்டத்தில் இவையே மிக உயரமான கட்டிடங்களாகும்.

சி கோபுரத்தில் தாய்பெய் மரியாட்டு விடுதி அமைந்துள்ளது. இவ்விடுதியை இக்வா பன்னாட்டு விடுதி ஆணையம் நிர்வகிக்கிறது. விடுதியில் மொத்தம் 318 அறைகள் உள்ளன. இது தாய்பெய் நகரத்தில் உள்ள சொகுசு விடுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிற்து. இக்வா பன்னாட்டு வளாகம் மிராமர் பொழுதுபோக்கு பூங்காவிற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. விடுதியின் அறைகள் தாய்பெய் வானத்தின் தனித்துவமான காட்சியைக் காண இயலும் வசதியை கொண்டுள்ளன. [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yihwa International Complex - The SkyscraperCenter". Skyscrapercenter.com.
  2. "Yihwa International Complex - Emporis". Emporis.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்வா_பன்னாட்டு_வளாகம்&oldid=3498334" இலிருந்து மீள்விக்கப்பட்டது