ஆர்யா கோபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்யா கோபி

ஆர்யா கோபி (Arya Gopi) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த மலையாள மொழிக் கவிஞர் ஆவார். இவர் மலையாளத்தில் ஐந்து புத்தகங்களையும் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

பிரபல மலையாளக் கவிஞர் பி. கே. கோபி மற்றும் கோமளம் ஆகியோருக்கு மகளாக மார்ச் 28 அன்று பிறந்த ஆர்யா கோபி, இரண்டு மொழிகளில் ஐந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவை: மலகா மத்ஸ்யம் (கதைகள், 2003), ஜீவந்தே வாக்குகள் (கவிதைகள், 2006), ஓசெழுத்து (2020). கேரளாவில் இலக்கிய நிகழ்வுகளில் வழக்கமான முகம், கேந்திர/கேரள சாகித்திய அகாதமி, மாத்ருபூமி, மனோரமா,[1] டி.சீ. புத்தகம்[2] மற்றும் இந்து நாளிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு இணையம் மற்றும் காட்சி ஊடகம் நிகழ்ச்சிகளில் கவிதைகளை வாசித்துள்ளார்.

மாணவர்களிடம் உரையாடும் ஆர்யா கோபி

முதுகலை ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் முதல் தரத்தினை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பெற்ற ஆர்யா இப்போது கோழிக்கோடு ஜாமோரின் குருவாயூரப்பன் கல்லூரியில் ஆங்கிலத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.[3] இவர் தனது முனைவர் பட்டத்தை இந்தியா - மார்க் டுல்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் சமூக இலக்கிய பகுப்பாய்வு எனும் தலைப்பில் மேற்கொண்டு முடித்துள்ளார்.[4]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

விருதுகள் மற்றும் சாதனைகள்[தொகு]

ஆர்யா கேரள சாகித்திய அகாதமி கனகஸ்ரீ விருது, கேரள அரசின் இளைஞர் விருது, கேரள மாநில இளைஞர் நல வாரியம் சுவாமி விவேகானந்தா இளைஞர் பிரதிபா விருது, வைலோப்பிள்ளி விருது, ஓ.என்.வி. பன்னாடு இளைஞர் விருது, கக்கட் விருது, வி.டி.குமரன் ஆசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arya Gopi | Exclusive Interview | Athmabhashanam | Manorama Online". Manorama Online.
  2. "KLF – Speaker-2020 – Arya Gopi". Archived from the original on 2023-01-31. பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
  3. "Arya Gopi". பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
  4. "Shodhganga : a reservoir of Indian theses @ INFLIBNET".
  • மலையாள மனோரமா மார்ச் 9, 2017 தேதியிட்டது, "யுவபிரதிபா புரஸ்கரம் ஆறு பெர்க்", மலையாள மனோரமா, 09-03-2017

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யா_கோபி&oldid=3935032" இலிருந்து மீள்விக்கப்பட்டது