ஆப்கானித்தான் போர் (1978-தற்போது)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர்
Afghanistan (orthographic projection).svg
ஆப்கானித்தானின் அமைவிடம்
நாள் 27 ஏப்ரல் 1978 – நடைபெறுகின்றது
(36 ஆண்டுகள், 5 மாதங்கள், 3 கிழமைகள் மற்றும் 6 நாட்கள்)
இடம் [[Image:{{{flag alias-23px}}}|22x20px|border|ஆப்கானிஸ்தானின் கொடி]] ஆப்கானிஸ்தான்
நடைபெறுகின்றது. இராணுவப் புரட்சி - ஆப்கானித்தான் சனநாயகக் குடியரசு (1978) - எழுச்சி - சோவியத் படையெடுப்பு (1979) - 'முகையிதீன்' எதிர்ப்பு - சோவியத் விலகல் (1989) - குடியரசின் வீழ்ச்சி (1992) - ஆப்கானித்தான் இசுலாமிய அரசு உருவாக்கம் (1992) - வெளிநாட்டு இராணுவ தலையீடு - உள்ளூர் யுத்தம் - தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய ஆட்சி உருவாக்கம் (1996) - தாலிபான்களின் ஆட்சிக்கு ஆப்கானித்தான் விடுதலைக்கான ஐக்கிய இசுலாமிய முன்னனியின் எதிர்ப்பு - 9/9 மற்றும் 9/11 சம்பவங்கள் (2001) - ஆப்கானித்தான் போர் (2001-தற்போது) (2001) - தாலிபான் அரசாங்கத்தின் வீழ்ச்சியும் ஆப்கானித்தான் இசுலாமிய குடியரசின் உருவாக்கமும் (2001) - தாலிபான்களின் எதிர்ப்பு.
இழப்புகள்
3,000,000 மரணம்

ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர் 1978 ஏப்ரல் 27 அன்று இடம்பெற்ற சவுர் புரட்சி எனப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் தொடங்கியது. ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிகளை ஆப்கானித்தானியர்கள் தொடர்ச்சியாக அனுபவித்தனர். புதிய ஆட்சியை வலுப்படுத்த சோவியத் படையெடுப்பு 1979 டிசம்பரில் இடம்பெற்றது. முஜாஹிதீன் என அழைக்கப்பட்ட ஆப்கானித்தான் எதிர்ப்புப்படை சோவியத் படையெடுப்புக்கு எதிராகப் போரிட்டனர். சில பிரிவினர் பாக்கித்தானிய சேவைகளிடை உளவுத்துறை மற்றும் சவுதி அரேபிய ஆதரவுடன் அமெரிக்காவின் உதவியைப் பெற்றன. சோவியத் படைகள் 1989 பெப்ரவரியில் இல் பின்வாங்கின. எனினும் சோவியத் ஆதரவு ஆப்கானித்தான் பொதுவுடமை ஆட்சி 1992 இல் காபூல் வீழ்ச்சியடையும் வரை தொடர்ந்தது.