ஆத்மராம் கோவிந்த் கெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆத்மராம் கோவிந்த் கெர் (Atmaram Govind Kher) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் சபாநாயகராக முதலாவது உத்தரப்பிரதேச சட்டமன்றதிலும், இரண்டாவது உத்தரப்பிரதேச சட்டமன்றத்திலும் மேலும் ஐந்தாவது உத்தரப்பிரதேச சட்டமன்றத்திலும் பணியாற்றினார்.[1][2] இவர் சட்டசபையில் மூன்று முறை சபாநாயகராகப் பணியாற்றி உள்ளார்.[3][4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 1894 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் நாள் ஜான்சி மாவட்டத்தில் உள்ள குர்சராயில் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர், 1916 ஆம் ஆண்டு சூன் மாதம் 9 ஆம் நாளில் சாந்தாபாய் கேரை மணந்தார். 1982 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் நாள் இவர் இறந்தார்.[5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "All Hon'ble Speakers". Uttar Pradesh Legislative Assembly.
  2. "SPEAKERS OF U.P.LEGISLATIVE ASSEMBLY". Legislative Bodies in India.
  3. "30 March 2022 Newspaper" (PDF). Daily Pioneer.
  4. "UTTAR PRADESH SPEAKER LIST". Oneindia.
  5. "Former Speaker". Uttar Pradesh Legislative Assembly.
  6. "Shri Atmaram Govind Kher Former Speaker of U.P. Legislative Assembly". Uttar Pradesh Legislative Assembly.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்மராம்_கோவிந்த்_கெர்&oldid=3841505" இலிருந்து மீள்விக்கப்பட்டது