ஆசியான் அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 41°04′58″N 29°03′12″E / 41.08265°N 29.05345°E / 41.08265; 29.05345
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியான் அருங்காட்சியகம்
Aşiyan Müzesi
ஆசியான் அருங்காட்சியகம் is located in Istanbul
ஆசியான் அருங்காட்சியகம்
ஆசியான் அருங்காட்சியகம் அமைவிடம்
நிறுவப்பட்டது1945
அமைவிடம்ஆசியான் யோகுசு, பெசுகிதாசு, இசுதான்புல்
ஆள்கூற்று41°04′58″N 29°03′12″E / 41.08265°N 29.05345°E / 41.08265; 29.05345
வகை
  • வரலாற்று அருங்காட்சிய்கம்
  • இலக்கிய அருங்காட்சியகம்
உரிமையாளர்இசுதான்புல் பெருநகர நகராட்சி

ஆசியான் அருங்காட்சியகம் (Aşiyan Museum-துருக்கியம்: Aşiyan Müzesi) என்பது இசுதான்புல்லில் உள்ள பெசிக்டாசு மாவட்டத்தின் ஆசியான் சுற்றுப்புறத்தில் உள்ள பிரபல துருக்கியக் கவிஞர் டெவ்பிக் பிக்ரெட் (1867-1915) என்பவரின் வீடு ஆகும். இது 1906-இல் கட்டப்பட்டது. பின்னர் 1945-இல் ஓர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.[1] இந்த அருங்காட்சியகம் இசுதான்புல் பெருநகர நகராட்சிக்குச் சொந்தமானது.[2][3][4]

கட்டிடம்[தொகு]

டெவ்பிக் பிக்ரெட் 1906 முதல் 1915-இல் இறக்கும் வரை இந்த வீட்டில் வாழ்ந்தார். இசுதான்புல் நகரின் நகரத் தந்தையும் ஆளுநருமான லுட்ஃபி கர்தாரின் முன்முயற்சியுடன் இவரது மனைவி நாசிமிடமிருந்து 1940ஆம் ஆண்டில் நகராட்சியால் இந்த கட்டிடம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் புதிய இலக்கிய அருங்காட்சியகம் ஓட்டோமான் துருக்கிசு என்ற பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 1945-இல் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஐயுப் கல்லறையில் புதைக்கப்பட்ட டெவ்பிக் பிக்ரெட்டின் எச்சங்கள், பொசுபோரசின் விருப்பத்தின் காரணமாக இவர் மிகவும் விரும்பிய இவரது வீட்டின் முற்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், 1961ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஆசியான் என மறுபெயரிடப்பட்டது.[1][4]

டெவ்பிக் பிக்ரெட் வீட்டின் அமைப்பினை தானாகவே வடிவமைத்தார்.[4] மேலும் இவரது வீட்டிற்குப் பாரசீக மொழியில் "கூடு" என்று பொருள். பாரசீக மொழியில் "ஆசியான்" என்பது கூட்டினை குறிக்கும்.[1] ஒரு தோட்டத்திற்குள் மூன்று மாடி மர கட்டிடமாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.

அருங்காட்சியகம்[தொகு]

ஆசியான் அருங்காட்சியகம், 2013

இந்த அருங்காட்சியகத்தின் தரைத் தளத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. முதல் தளத்தில் அப்துல்ஹாக் ஹமித் தர்ஹான் (1851-1937) மற்றும் பெண் கவிஞர் நிகர் ஹனாம் (1856-1918) ஆகியோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் "புதிய இலக்கிய இயக்கத்தின்" கவிஞர்கள் ஆவர். தனித்தனி அறைகளில், ஓவியங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் இரு கவிஞர்களின் தனிப்பட்ட பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1][2]

இரண்டாவது மாடியில், டெவ்பிக் பிக்ரெட்டின் வரவேற்பு மற்றும் படுக்கையறை அமைந்துள்ளது.[2] இவரது தனிப்பட்ட பொருட்கள், இவரது எழுத்து மேசை, கை நாற்காலி, வரைபடங்கள் மற்றும் இவர் உருவாக்கிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. படுக்கையறையில், இவரது மரண முகமூடி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2] பிக்ரெட்டின் "சிஸ்" (ஆங்கில மொழி: fog fog) என்ற கவிஷாஜதா உத்வேகத்து இவர் உருவாக்கிய அப்போதைய ஒட்டோமான் ஷாஜாதா அப்துல்மெசிட் (1868-1944)இன் ஓவியம் இந்த மாடியில் சுவரில் மாட்டப்பட்டுள்ளது.[1]

ஆசியான் அருங்காட்சியகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு, ₺ 1.128 மில்லியன் (சுமார் 640,000 அமெரிக்க டாலர்கள்) செலவில் ஒன்றரை ஆண்டு பணிகளுக்குப் பிறகு திசம்பர் 2012-இல் நகரத்தந்தை கதிர் டோப்பாசால் மீண்டும் திறக்கப்பட்டது.[3][4]

மறுசீரமைப்பு மூலம், அசல் புகைப்படங்களுக்கு மெழுகு பூசப்பட்டும் தெவ்பிக் பிக்ரெட்டின் மெழுகு சிற்பமும் அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டது.[4]

அனுமதி[தொகு]

அருங்காட்சியகம் திங்கட்கிழமை தவிர வாரநாட்களில் 09:00 முதல் 16 00 வரை திறந்திருக்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Aşiyan Müzesi" (in Turkish). Istanbul Net. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 2.3 Akçakaya , Ali. "Aşiyan Müzesi" (in Turkish). İstanbul Büyükşehir Belediyesi. Archived from the original on 2019-01-13. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 "Aşiyan Müzesi restore edildi" (in Turkish). Sabah. 2012-12-14. http://www.sabah.com.tr/Yasam/2012/12/14/asiyan-muzesi-restore-edildi. பார்த்த நாள்: 2013-03-27. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Aşiyan Müzesi yenilendi" (in Turkish). arkitera. 2012-12-17. பார்க்கப்பட்ட நாள் 2013-03-27.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)