ஆக்சிசன் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்சிசன் விரைவுவண்டி
26 ஏப்ரல் 2021, மகாராட்டிராவின் கலம்போலியில் ஆக்சிசன் விரைவுவண்டி சேவை

ஆக்சிசன் விரைவுவண்டி (Oxygen Express) என்பது இந்திய இரயில்வே அமைச்சகமும் இந்திய இரயில்வேவும் இணைந்து இயக்கும் நீண்ட தூர/குறுகிய தூர இரயில் சேவை தொடர் வண்டியாகும். கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவ தர ஆக்சிசனை வழங்கி ஆக்சிசன் விரைவுவண்டி கடுமையான பற்றாக்குறையை சமாளித்தது.[1]

பின்னணி[தொகு]

ஆக்சிசன் விரைவு இரயில்கள் இரண்டு வடிவங்களில் இயக்கப்படுகின்றன; 16 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிசனை எடுத்துச் செல்லக்கூடிய கடுங்குளிரூட்டப்பட்ட பன்னாட்டு செந்தர நிறுவன கொள்கல தொட்டிகளைப் பயன்படுத்தி கொண்டு செல்வது முதல் முறையாகும்.[2] இரண்டாவது முறையானது, டாடா மோட்டார்சு 1618 போன்ற நிலையான கொள்கலத் தொட்டிகளை இந்திய இரயில்வே மற்றும் இந்திய இராணுவம் பயன்படுத்தும் உருட்டு ஏற்றம்/உருட்டு இறக்கம் முறையில் இரயிகளில் ஏற்றப்படும் முறையாகும். [3]

தொற்றுநோய் கால உச்சக்கட்டத்தின் போது, இவ்வண்டிகள் சமிக்ஞை இல்லாத, பசுமை வழித்தட வழிகளில் ஓடின. பல்வேறு எஃகு ஆலைகளில் இருந்து ஆக்சிசனை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்றன.[4]

2021 ஆம் ஆன்டு சூலை மாதத்தில் டாடாநகர் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து வங்காளதேசத்தில் உள்ள பெனாபோல் எல்லை பகுதிக்கு 200 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிசன் கொண்டு செல்லப்பட்டது. [5]

படக் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Changoiwala, Puja (2021-05-01). "India at breaking point" (in en). New Scientist 250 (3332): 7. doi:10.1016/S0262-4079(21)00715-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0262-4079. https://www.sciencedirect.com/science/article/pii/S0262407921007156. 
  2. Mehdiratta, Lalit; Sharma, Ridhima; Jain, Sarvesh (October 2021). "Anaesthesiology as an oasis amid the crisis of the vital medicine 'Oxygen'- innovations and local modifications". Indian Journal of Anaesthesia 65 (Suppl 4): S145–S148. doi:10.4103/ija.ija_904_21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5049. பப்மெட்:34908565. பப்மெட் சென்ட்ரல்:8613475. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8613475/. 
  3. "Indian Railways' Oxygen Express train to reach Maharashtra with medical oxygen". The Economic Times. 20 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
  4. "Oxygen Express from Jamshedpur arrives in Bengaluru" (in en-IN). The Hindu. 2021-05-11. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/bangalore/oxygen-express-from-jamshedpur-arrives-in-bengaluru/article34532892.ece. 
  5. "In a first, Oxygen Express to supply LMO to Bangladesh". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-24. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிசன்_விரைவுவண்டி&oldid=3379725" இலிருந்து மீள்விக்கப்பட்டது