ஆக்சலோ அசெட்டிக் அமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆக்சலோ அசெட்டிக் அமிலம் | |
|---|---|
|
Oxobutanedioic acid |
|
|
பிற பெயர்கள்
ஆக்சலோ அசெட்டிக் அமிலம்; |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| EC number | |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | C4H4O5 |
| மோலார் நிறை | 132.07 கி/மோல் |
| உருகுநிலை |
161 °செ |
| Thermochemistry | |
| Std enthalpy of formation ΔfH |
-943.21 கிஜூ /மோல் |
| Std enthalpy of combustion ΔcH |
-1205.58 கிஜூ /மோல் |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
ஆக்சலோ அசெட்டிக் அமிலம் (Oxaloacetic acid) என்னும் வேதிச் சேர்மத்தின் வாய்பாடு: C4H4O5 (அ) HOOC-(C=O)-(CH2)-COOH. இதற்கு பல பெயர்கள் உள்ளது: ஆக்சலோ அசெட்டிக் அமிலம், ஆக்சலா அசெட்டிக் அமிலம், ஆக்சோசக்சினிக் அமிலம் மற்றும் ஆக்சோ பியூட்டேன்டையோயிக் அமிலம். இதன் நேர்மின்னி (புரோட்டான்) நீக்கப்பட்ட வழிப்பொருள் ஆக்சலோ அசெடேட் எதிரயனியாகும்: C4H2O52− (அ) [(C=O)2(CH2)(C=O)]2−. இப்பெயர் இரு இணைதிற [-O(C=O)2(CH2)(C=O)O-] செயல் தொகுதியைக் கொண்டுள்ள இதன் மணமியங்களுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆக்சலோ அசெட்டிக் அமிலம், ஒரு நேர்மின்னியை இழப்பது அமிலத்தின் இணை காரமான எதிரயனியை (ஹைடிரசன்ஆக்சலோ அசெடேட்) கொடுக்கிறது: H(C=O)2(CH2)(C=O)−.