அழகேசு தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகேசு தாசு
Alakesh Das
நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம்
நவதீப் மக்களவைத் தொகுதி
பதவியில்
2003–2009
முன்னையவர்ஆனந்தமோகன் பிசுவாசு
பின்னவர்தொகுதி கலைக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1964 (1964-01-01) (அகவை 60)
நதியா மாவட்டம், மேற்கு வங்காளம்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி(மா)
துணைவர்சிக்தா இயோதர் தாசு
பிள்ளைகள்1 மகள் அழக்தா தாசு
வாழிடம்நதியா
As of 17 செப்டம்பர், 2006
மூலம்: [1]

அழகேசு தாசு (Alakesh Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1964 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14 ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.[1] மேற்கு வங்காளத்தின் நவதீப் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேற்கு வங்காள அரசியலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சியம்) உறுப்பினராகச் செயல்பட்டார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அழகேசு தாசு 1964 ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தின் நதியா மாவட்டத்திலுள்ள இரானாகாட்டில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சியாம் சந்திர தாசு என்பதாகும். கல்யாணி பல்கலைக்கழகத்தில் ஆனர்சு படிப்பில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A look at new Members of Parliament from West Bengal" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.
  2. "Alakesh Das Election Results 2019: News, Votes, Results of Assembly" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-26.
  3. "Shri Alakesh Das MP biodata Nabadwip-SC | ENTRANCE INDIA" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-19.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகேசு_தாசு&oldid=3854790" இலிருந்து மீள்விக்கப்பட்டது