அழகி (மென்பொருள்)
அழகி என்பது கணினியில் இந்திய எழுத்துக்களை தட்டெழுதவென உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும். இது ஆரம்ப காலத்தில் தமிழ் மொழிக்கு மட்டும் பயன்பட்டது, தற்போது, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளிலும் இக்கருவியை பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம்.
ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் உரிய ஒலிவடிவைத் தரக்கூடிய ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புகள் (key mapping) தெரிவு செய்யப்பட்டு அத்தொகுப்புக்களைத் தட்டெழுத, முறையான தமிழெழுத்துக்கள் கணினியில் திரையில் தோன்றும் வகையில் இம்மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைவர் மனதிலும் இயற்கையாகத் தோன்றும் ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புக்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் வெவ்வேறு விதமான ஆங்கில எழுத்துக்களின் தொகுப்புகளைக் கையாளும் வசதி (alternative key mappings) உள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] திரை அமைப்பு
அழகியில் இருதிரை அல்லது ஒரு திரை முறையைப் பயன்படுத்தும் வசதியுள்ளது. இருதிரை முறையில் மேற்புறமுள்ள திரையில் நாம் தட்டெழுதும் ஆங்கில எழுத்துக்களும், கீழ்ப்புறமுள்ள திரையில் அதற்கீடான தமிழ் எழுத்துக்களும் தோன்றும். ஒரு திரை முறையில் தமிழ் எழுத்துக்கள் மட்டும் தோன்றும். அழகியின் திரை திறந்ததும் அதில் சிறிய ஒரு அட்டவணை தோன்றுகிறது. புதிதாய் அழகியை உபயோகிப்போர்அதில் காணும் தமிழ் எழுத்துக்களுக்கீடான ஆங்கில எழுத்துக்களைத் தட்டி மிக எளிதில் தமிழைக் கணினியில் எழுதலாம். அவ்வாறு எழுதியதை மின்னஞ்சல் வழியே அனுப்பும் வசதி அழகியில் உள்ளது. தற்பொழுது நடைமுறையில் வந்துள்ள ஒருங்குறி (Unicode) வகை எழுத்துக்களில் தமிழை எழுதும் வசதி அழகி மென்பொருளில் உள்ளடக்கம் செய்யப் பட்டுள்ளது.
[தொகு] பயன்பாடு
அழகியின் துணையோடு அழகி தவிர்த்த கணினியின் பிற பயன்பாட்டு மென்பொருட்களிலும் தமிழை உள்ளிட முடியும். அழகி மென்பொருளை முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
[தொகு] ஒலிபெயர்ப்பு
ஸ்ரீமதி என்ற சொல்லைப் பெற, srimathi, sreemathi, shrimathi, shreemathi, srimadhi, shrimadhi எனப் பல்வேறு ஆங்கிலச் சொற்களின் தொகுப்புக்களை உபயோகப் படுத்தலாம். மஞ்சு, கஸ்தூரி, மஞ்சள், சிங்கம், சங்கு, நீங்க, நாங்க, விஸ்வம், பொய், நன்றி, கற்று முதலிய சொற்களை manju, manjaL, singam, sangu, neenga, naanga, visvam, poi, nandri, katru என்று இயல்பான எழுத்துக்களைத் தட்டிப் பெறலாம். ஆங்கிலத்தில் Mr என்று தட்ட 'ஸ்ரீ' என்ற எழுத்து கிடைக்கிறது. நீங்க என்பதை niinga என்றும் பெறலாம்.
எங்கே, அங்கே, இங்கே, வந்தே, தந்தே, பலனே, பலமே என வரும் சொற்களை enge, engae, ange, angae, inge, ingae, vanthe, vanthae, thanthe, thandhae, palane, palanae, balame, balamae என எளிதாகப் பெறலாம் engE, angE, ingE, vandhE, palanE, balamE என்று ஷிஃப்ட் உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை எனினும் இவ்வாறு ஷிஃப்ட் உபயோகித்தும் பெறலாம்.
ந, ன, ண எனும் எழுத்துக்களை முறையே nha, na, Na என்று எழுதிப் பெறலாம். இவற்றுள் ஒரு வரியின் முதல் எழுத்திலும் ந வருகையில் na என்று எழுதினால் போதுமானது பிற இடங்களில் மட்டும் nha உபயோகிக்க வேண்டும்.
ஒரு வரியின் முதல் எழுத்தாக ல, ள, ழ ஆகிய எழுத்துக்களை la, La, za அல்லது zha எனத்தட்டெழுதிப் பெறலாம். ர, ற என்பவற்றை முறையே ra, Ra என்று தட்டிப் பெறலாம். கற்ற, மற்ற, சிற்றூர், பெற்றோர், முற்றம், சுற்றம் போன்ற வார்த்தைகளை katra, matra, sitruur, petroar, mutrum, sutram என எளிதில் பெறலாம். kaRRa, maRRA, siRRuur, peRRoar, muRRam, suRRam என எழுத வேண்டியதில்லை, இவ்வாறு எழுதியும் பெறலாம்.
இது போல அனைத்து விதங்களிலும் கடினமான தூக்குவிசை (shift key) உபயோகித்துப் பெறக்கூடிய வார்த்தைகள் அனைத்தையும் தூக்குவிசை உபயோகிக்காமல் எளிய வழியில் பெறுவதுடன் தூக்குவிசை உபயோகித்துப் பெறும் பழக்கமுள்ளவர்கள் தொடர்ந்து அவ்விதமே பெறவும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
ச எனும் எழுத்தை sa, cha எனும் இரு வழிகளில் பெறலாம். சச்சரவு - sachcharavu, chachcharavu, சச்சிதானந்தம் - sachchithaanandham, chachchithanandham, சச்சின் - sachchin, chachchin
[தொகு] ஆங்கிலச் சொற்கள்
சஸ்பென்ஸ் - saspenS, சிஸ்டம் - sistam, சிஸ்டர் - sistar, சில ஆங்கில வழிப் பெயர்ச்சொற்களைப் பலுக்கல் மாறாமல் தமிழில் எழுதுவது மிகவும் எளிது. எடுத்துக்காட்டாக Patrik எனும் பெயரை பேட்ரிக் என்று பெற paeTrik எனத்தட்டினால் போதும். paetrik எனத்தட்ட "பேற்றிக்" என்றாகி விடுவதால் இத்தகைய முன்னேற்பாடு அழகி மென்பொருளில் காணப்படுகிறது.
[தொகு] எடுத்துக்காட்டு
முத்தைத்தரு பத்தித் திருநகை யத்திக்கிரை சத்திச்சரவண
muththaiththaru paththith thirunhagai yaththikkirai saththichcharavaNa
முக்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
mukthikkoru viththuk kurubara enavoathum
முக்கட்பரமர்க்குச்சுருதியின் முற்பட்டது கற்பித்திருவரு
mukkatparamarkkuchchuruthiyin muRpattathu kaRpiththiruvaru
முப்பத்து முவர்க்கத் தமரரு மடிபேண
muppaththu muvarkkath thamararu madipaeNa
திக்குளெட்டுக்கைந்துக்கமுற்றுத்திடுக்கிட்டலர
thikkuLettukkainthukkamutruththidukkittalara
மைக்கடற்குட்சரந்தைக்கவிட்டோர்க்கிடமாமதுர
maikkadaRkutcharanthaikkavittoarkkidamaamathura
இக்குமுற்றிக்கணுச்சற்றுவிட்டுத்தெரித்திட்டமுத்தைக்
ikkumutrikkaNuchchatruvittuththeriththittamuththaik
கொக்குமொக்கிக்கக்கிவிக்குமச்சோலைக்குறுங்குடியே
kokkumokkikkakkivikkumachchoalaikkuRungudiyae
எட்டெழுத்தைக்கருத்திற்குறித்திட்டு நித்தம் பரவும்
ettezuththaikkaruththiRkuRiththittu niththam paravum
சிட்டர்கட்குத்திருப் பொற்பதத்தைச் சிறக்கத்தருமவ்
sittargatkuththirup poRpathaththaich chiRakkaththarumav
வட்டநெட்டைப்பணி மெத்தையத்தர்க்கிடம் வாரிசைப்பொ
vattanhettaippaNi meththaiyarkkidam vaarisaippo
குட்டினத்துக்குலந்தத்துமுத்தீனும் குறுங்குடியே
kuttinaththukkulanthaththimuththiinum kuRungudiyae