அழகப்பா அழகப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ மஹா வல்லப கணப்தி கோயில், வட அமெரிக்கா, ஃப்ளஷிங், குயின்ஸ்

அழகப்பா அழகப்பன் (Alagappa Alagappan)(டிசம்பர் 3, 1925 - அக்டோபர் 24, 2014) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வட அமெரிக்காவின் இந்து கோயில் சங்கத்தின் நிறுவனர் ஆவார்.

அழகப்பன் டிசம்பர் 3, 1925 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளகானாடுகாத்தானில் பிறந்தார்.[1] இவர் மெட்ராஸில் (இப்போது சென்னை) உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். பின்னர் இலண்டன் பொருளியல் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளியில் (எல்எஸ்இ) சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார், சட்டம் பயின்ற இவர் பிரித்தானியச் சட்டம் பட்டம் பெற்றார்.[1]

ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றுவதற்கு முன்பு அழகப்பன் ஒரு பத்திரிகையாளராக இருந்தார்.[1]

1970ஆம் ஆண்டில், இவர் வட அமெரிக்காவின் இந்து கோயில் சங்கத்தை நிறுவினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Alagappa Alagappan, 88, Dies; Founded Hindu Temples Across U.S." பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகப்பா_அழகப்பன்&oldid=3174232" இலிருந்து மீள்விக்கப்பட்டது