அல் ஷமா பள்ளிவாசல், காசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் ஷமா பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்காசாக்கரை ஹேய் அல் நஜரய்ன், ஜைய்தூன் சதுக்கம், காசா, பலத்தீன் நாடு
சமயம்இசுலாம்
மாகாணம்காசா
மாவட்டம்காசா
செயற்பாட்டு நிலைசெயல்பாடில் உள்ளது

அல் ஷமா பள்ளிவாசல் (Al-Shamah Mosque) அல்லது பாபத் தாரும் பள்ளிவாசல் என்பது பலத்தீன் நாட்டின் காசா நகரில் ஹேய் அல் நஜரய்ன் பகுதியில் உள்ள பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் ஆகு‌ம். இப்பள்ளிவாசலில் மினார் இல்லை.[1]

வரலாறு[தொகு]

இது மம்லுக் அரசின் காசா பகுதிக்கான ஆளுனர் சன்ஜார் அல் ஜாவ்லி என்பவரால் கி.பி.1315 மார்ச் 8 இல் கட்டப்பட்டது.[2][3]

பள்ளிவாசலில் உள்ள கல்வெட்டுக் குறிப்பின்படி இந்த பள்ளிவாசல் மாம்லுக் சுல்தான் அல்-நசீர் முகமதுவின் ஆட்சியில் காசா ஆளுநர் அல் ஜாவ்லியால் கட்டப்பட்டது. பின்பு 1799 இல் நெப்போலியன் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, அல்-ஷமா பள்ளிவாசல் பல தடவை மீட்டமைவுகள் மூலம் பழுது பார்க்கப்பட்டது.[4]

வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்புகள்[தொகு]

  • கி.பி.1315 இல் இப்னு பதூதா எனும் வரலாற்று ஆய்வாளரின் கூற்று வருமாறு: "காசா நகரில் அழகான வெள்ளிக்கிழமை தொழுகைக்கான பள்ளிவாசல் அமீர் அல்-ஜாவ்லி அவர்களால் கட்டப்பட்டு இருந்தது. அது விமர்சையாக கட்டப்பட்ட, நேர்த்தியான கட்டிடம் ஆகு‌ம்.அதன் பிரசங்க பகுதியில் வெள்ளை பளிங்கு கற்கள் இருந்தது".
  • 15 ஆம் நூற்றாண்டை சார்ந்த அல் சகாவி எனும் வரலாற்று ஆய்வாளரின் கூற்று வருமாறு: "கி.பி.1440 இல் அல் ஷாமா பள்ளிவாசலின் இமாமாக கதீப் யூசுப் அல் காஜி அவர்கள் இருந்தார்கள்".[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharon, 2009, p. 34
  2. Meyer, p. 150
  3. Sharon, 2009, p. 84
  4. Sharon, 2009, pp. 84 -85
  5. Sharon, 2009, p. 85

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_ஷமா_பள்ளிவாசல்,_காசா&oldid=3816991" இலிருந்து மீள்விக்கப்பட்டது