அல்வார் இந்திரா காந்தி விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரா காந்தி விளையாட்டரங்கம்
Indira Gandhi Stadium
அரங்கத் தகவல்
அமைவிடம்அல்வார், ராஜஸ்தான்
உருவாக்கம்1993 முதலாவது பதிவு செய்யப்பட்ட போட்டி
இருக்கைகள்40,000
முடிவுகளின் பெயர்கள்
இல்லை
அணித் தகவல்
இராசத்தான் துடுப்பாட்ட அணி]] (1993-1995)
10 ஆகத்து 2015 இல் உள்ள தரவு
மூலம்: Ground profile

இந்திரா காந்தி விளையாட்டரங்கம் (Indira Gandhi Stadium) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் அல்வார் நகரத்தில் உள்ளது. பல்நோக்கு விளையாட்டு அரங்கமான இங்கு கால்பந்து , வளைகோல் பந்தாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1993 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இராசத்தான் துடுப்பாட்ட அணி விதர்பா துடுப்பாட்ட அணியை எதிர்த்து விளையாடிய ரஞ்சிக் கோப்பை துடுப்பாட்டப் போட்டி இங்கு நடைபெற்றது.[1] இதைத் தவிர மேலும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. கடைசியாக 1995/1996 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை போட்டியில் தெற்கு மண்டல துடுப்பாட்ட அணியும் மேற்கு மண்டல மண்டல துடுப்பாட்ட அணியும் இங்கு மோதின.[2]

2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 6,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவ ஆட்சேர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றபோது அரங்கத்திற்குள் நுழைந்தனர். நான்கு மணி நேரம் இக்கூட்டத்தால் அரங்கு நிரம்பியிருந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]