அல்லாடி குப்புசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லாடி குப்புசாமி
Alladi Kuppu Swami
தலைமை நீதிபதி - ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
1980–1982
முன்னையவர்சாலா கொண்டையா
பின்னவர்கே. மாதவரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-03-23)23 மார்ச்சு 1920
இறப்பு(2012-03-12)12 மார்ச்சு 2012

நீதிபதி அல்லாடி குப்புசாமி (Alladi Kuppu Swamy)(1920-2012) என்பவர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார்.[1]

அல்லாடி கிருஷ்ணசசாமி ஐயரின் மகனான இவர் 23 மார்ச் 1920-ல் பிறந்தார். சென்னை இலயோலாக் கல்லூரியில் இளங்கலையும் சென்னை, சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டக் கல்வியும் பயின்றார். இவர் 1939-ல் முதல் வகுப்பில் இளநிலை கணிதப் பட்டம் பெற்றார். 1939-41-ல் சட்டம் பயின்றார். இவர் மறைந்த ஸ்ரீ வி. கோவிந்தராஜாச்சாரியிடம் வழக்கறிஞர் பயிற்சியினைப் பெற்றார். 1942-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் ஆந்திரப் பிரதேச வழக்கறிஞர் கழக உறுப்பினராக 1961 முதல் 1967 வரை இருந்தார்.

குப்புசாமி, 12 மார்ச் 2012 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத்தில் மாரடைப்பால் இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile of Alladi Kuppu Swami at Andhra Pradesh High Court". பார்க்கப்பட்ட நாள் 19 October 2009.
  2. Alladi Kuppu Swamy passes away
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லாடி_குப்புசாமி&oldid=3805678" இலிருந்து மீள்விக்கப்பட்டது