அலைத்திருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சைன் அலை சமிக்கைகள் அரை அலைச் சீராக்கம், முழு அலைச் சீராக்கம் செய்யப்பட்டபின்பு

அலைத்திருத்தி (இலங்கை வழக்கு: சீராக்கி, Rectifier) என்பது மாறுதிசை மின்னோட்டத்தை நேர்த்திசை நேர்த்திசை மின்னோட்டமாக மாற்றும் கருவி ஆகும். இதைச் செய்ய மின்னோட்டத்தை ஒரு திசையில் மட்டும் அனுப்பிடும் உறுப்பான இருமுனையம் பயன்படுகிறது. [1]

அரையலைத் திருத்தி [தொகு]

Halfwave.rectifier.en.svg

அலைத்திருத்தி சுற்றுகளில் மிகவும் எளிதானது இது. மாறுதிசை மின்னோட்டத்தின் ஒரு பாதி அலையை மட்டும் செலுத்தி மறுபாதியைத் தடுத்துவிடும் அமைப்பு அரையலைத் திருத்தி.

இவ்வமைப்பில் தாழ்வடுக்கு மின்மாற்றி வெளியீட்டுச் சுற்றில் ஒரு டையோடு இணைக்கப்படுகிறது. தா. மின்மாற்றியால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னோட்ட அலையின் முதல் அரைப்பகுதியின் போது டையோடு முன்னோக்கு சார்பில் இருக்கும்; எனவே, மின்னோட்டம் அதன் வழியே கடத்தப்படும். அலையின் இரண்டாவது அரைப்பகுதியின் போது டையோடு பின்னோக்குச் சார்பில் இருப்பதால் மின்னோட்டத்தை அது தடுத்து விடுகிறது.

முழு அலைத்திருத்தி [தொகு]

முழு அலைத்திருத்தி என்பது ஒரு நேர்திசை மின்னோட்டத்தின் இரு பகுதியையும் திருத்தும் சுற்று ஆகும். இதில் இருமுனையங்களின் வலைப்பின்னல் வடிவமைப்புப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதில் ஓர் அலையின் இரு பகுதிகளும் திருத்தப்படுகின்றன. இவை ஒரு முழு சைன் அலையை ஒத்துள்ளன. இவ்வகை அலைத்திருத்திக்குச் சமன் சுற்று அலைத்திருத்தி (Bridge wave rectifier) ஓர் எடுத்துக்காட்டாகும்.

குறிப்புதவி [தொகு]

  1. All About Circuits [1]
"http://ta.wikipedia.org/w/index.php?title=அலைத்திருத்தி&oldid=1360816" இருந்து மீள்விக்கப்பட்டது